36
கோமளத்தின்
பணந்தானே, பராரியாக பாழுஞ்சத்திரத்திலே உயிரை மாய்த்துக் கொள்ள இருந்த தன்னை, பட்டினத்துக்குப் புது குபேரனாக்கிற்று. லிங்கத்துக்குப் பணத்தின் சக்தியா தெரியாது? எனவே அந்தப் பாதகிக்கு பணமெனும் பலம் இருக்கும் வரையில் அவளைப் பகைத்து ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணியே வேறு ஏற்பாடுகளைச் செய்துகொண்டு வந்தான். இடையே பாஸ்கரனின் கவலை வந்துவிட்டது. பாபம் பாஸ்கரன்! கோமளத்தையே தனது உயிராக எண்ணினான். தனது குடும்ப சொத்து மிக விரைவாகவே கரைத்துக் கொண்டும் வந்தான். இந்த ஆபத்தைத் தடுக்க வேண்டும் என்று எண்ணினான் லிங்கம். தன் வார்த்தை பாஸ்கரன் காதில் ஏறுமென எண்ணியே அவன் மாளிகை சென்று மந்திராலோசனை கூறினான். ஏறுமா இவன் சொல்! தலையணை மந்திரம் ஏறிய பிறகு பிறிதொரு மந்திரம் செல்ல இடமுமுண்டோ? தையலின் மையலில் சிக்கிய பிறகு, நண்பன் மொழி என்ன செய்யும், நல்லோர் வார்த்தை எதுக்கு! மன்மதனிடம் மண்டியிட்ட பிறகு மகேஸ்வரனாலும் மீட்க முடியாதே அந்த அடிமையை!
✽✽✽
ஒரு முரட்டு மனிதனை அழைத்து 100 ரூபாய் கொடுத்தனுப்பினான் லிங்கம் என முந்திய இதழில் குறிப்பிட்டிருந்தோமல்லவா! அவன் லிங்கத்தின் சொற்படி கோமளத்தின் தோட்டக்காரனாக வேலைக்கமர்ந்தான்.
அவன்தான் லிங்கத்துக்கு ஒற்றன். கோமளத்தின் வீட்டில் நடக்கும் ஒவ்வொன்றையும் விடாது கவனித்து சேதி சொல்பவன். விநாடிக்கு விநாடி கோமளம் என்ன செய்கிறாள், யாரைக்காண்கிறாள் என்பதெல்லாம் லிங்கத்துக்குத் தெரியும். கோமளம் இதை அறியாள். லிங்கத்திடம் அவளுக்குப் பயமிருந்தது. ஆனால் தன் மீது வஞ்சம் தீர்த்துக்கொள்ள அவன் விரும்புவது மட்டும் அவளுக்குத் தெரியாது. அவன் மட்டும் ‘ஜாடை’ காட்டி இருந்தால் போதும், கோமளம் அவனுடன் கூடிக்குலாவத் தயாராக இருந்தாள். அவளுக்கென்ன அந்த வித்தை தெரியாதா? பழக்கமில்லையா! அழகு