பக்கம்:கோயில் மணி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

கோயில் மணி

தனக்கும் பல பிள்ளைகள் பிறந்தால்?

பிறக்காமல் பண்ணிக் கொள்ளலாமே!

சொந்தக் குழந்தையைப் போல அயலார் குழந்தை ஆகுமா?

எது அயலார் குழந்தை? அந்தக் குழந்தைக்காகத் தானே அவர் அவளை மணம்புரிந்து கொள்கிறார்?

முப்பத்தைந்து வயசுப் பெண் பிள்ளைக்கு என்ன பிரமாதமான சுகம் கிடைத்து விடப்போகிறது?

அம்மாவுக்குப் பிறகு தன்னைக் கொல்லும் தனிமையைப் போக்க யாராவது துணை வேண்டாமா?

துணை வேண்டுமென்று சிக்கலை வரவேற்பதா? என்ன இருந்தாலும் முதல் மனைவியோடு நன்றாக வாழ்ந்தவருக்குத் தன்னிடம் தூய காதல் உண்டாகுமா? அதைக் காதல் என்றுசொல்வதற்கில்லை; அன்பென்று சொல்லலாமா? இரக்கம் என்று சொல்லலாமா?

தனக்கு இருக்கும் பணத்துக்காகக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறாரோ?

சீ! என்ன பேதைமை!

ஒரு வாரம் அவள் இப்படிக் குழப்பத்திலே தத்தளித்தாள். பிறகு அவளுக்குத் தான் கசங்காத மலராகவே இருந்துவிடவேண்டுமென்று தோன்றியது. ஆனால் தன் குறையை ஒருவாறு நிரப்பிக் கொள்ள வேண்டுமென்ற ஆவலும் தோன்றியது. ஒரு விதமாக யோசித்துக் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தாள். அவரை அழைக்கவும் இல்லை.

அவர் ஒரு கடிதத்தைத் தபாலில் எழுதிப் போட்டிருந்தார். நேரே கேட்க நாணம். கடிதம் சுருக்கமாகத் தான் இருந்தது: "நான் என்ன செய்வதென்று நீ இன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/120&oldid=1384118" இலிருந்து மீள்விக்கப்பட்டது