பக்கம்:கோயில் மணி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணனுக்குக் கால் வலித்தது

87

காரரை அல்லவா கேட்கவேண்டும்?” என்று பணிந்த மொழியில் கூறினார்.

முத்துவின் கோபத்தீ மண் எண்ணெய் விட்டாற் போல் கொழுந்துவிட்டது; “ஓகோ, உம்முடைய இடத்துக்கு வந்து பஜனை செய்வதும் செய்துவிட்டு, பத்திரிகைக்காரன் மேல் தாவாபோடச் சொல்கிறீரோ!” அவர் இரையத் தொடங்கினார்.

“இப்பொழுது ஒரு முழுப் படமாக எடுத்துவிட்டால் போகிறது. எங்கே அப்பா, போட்டோக்காரர்?” என்று ஒருவர் இடையே கூறினார்.

“இந்தக் கட்டத்தில் இனிப் பஜனை எப்போது தொடருமோ, தெரியாது; வா அப்பா, போகலாம்” என்று சொல்லிக் கண்ணன் நாரதரை அழைத்துக்கொண்டு வெளியேறினான்.

அங்கேயும் பெரிய கூட்டம். ஆண்களும் பெண்களும் கூடியிருந்தார்கள். இளவட்டங்கள் அதிகமாக இருந்தார்கள். எல்லோரும் தலையை அசைத்துத் தாளம் போட்டுக்கொண்டிருந்தார்கள். நடுவில் அமர்ந்து ஒரு புெண்கள் கோஷ்டி பாடிக்கொண்டிருந்தது; பஜனைதான். சுவாமி படங்களை வைத்த இடம் ஒரு மூலையில் இருந்தது. பஜனைக் கோஷ்டியைச் சுற்றி ஜனங்கள் நெரிசலாக உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டிருந்த மங்கையொருத்தி கையில் சப்பளாக் கட்டையுடன் பாடிக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பின் மற்றப் பெண்கள் பாடினார்கள். தேனினும் இனிய குரலில் அந்தப் பெண் பாடினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/93&oldid=1383981" இலிருந்து மீள்விக்கப்பட்டது