பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

தெரியொளியின் பெருமையெலாம் இருளால் அன்றோ திகழுநிழல் அருமையெலாம் வெயிலால் தோன்றும் அறிவுடைமைப் பெருமையெலாம் அறியா மைய்ை

அறிவதனால் உண்டாகும்; அதனால் யாரும்

அறிவின்மை தம்பாலுண் டெனவு ணர்தல்

அடைவெற்றி முதற்படியாம்; இதனை நன்றே 'அறிதோறும் அறியாமை கண்டற் றால்'என்

றறக்குரிசில் வள்ளுவனார் அறைந்தா ரன்றே!

3|8

உலகத்தில் அறியாமை இலாதார் இல்லை;

ஒன்றறிந்தார் மற்றொன்றில் அறியா தாராம்; உலகத்தில் அறிவற்றார் எவரும் இல்லை;

ஒன்றறியார் மற்றொன்றில் உயர்ந்து நிற்பார். 'பல்கற்றும் உலகவியல் பயிலா ராயின்

பயினில்லார் எனுஞ்சொல்லின் பயன. றிந்தே கலகலத்தே அறியாமை கழிவ தற்குக்

கடமையறிந் தவர வரும் கடுக வேண்டும்.

3|9

| 62