பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

தொழில்பெருகித் துலங்கி வாழ்க!

தொன்மை நலம் விளங்கி வாழ்க! எழில்மகளிர் கற்பில் வாழ்க!

ஏறுகளாய் இளைஞர் வாழ்க! பொழில்போலும் சான்றோர் வாழ்க!

புகழ்வேட்டை ஆடார் வாழ்க! மொழிக்கொலைகள் செய்யார் வாழ்க!

மொத்தத்தில் நல்லோர் வாழ்க!

638

ஆள்வோர்செங் கோலில் வாழ்க!

ஆட்பட்டோர் உரிமை வாழ்க! சூழ்செயலில் நேர்மை வாழ்க!

சூரர்களாய் எளியோர் வாழ்க! பாழ்சாதி ஒழிய வாழ்க!

பாட்டுலகம் பனைத்து வாழ்க! வாழ்வாங்கில் உலகோர் வாழ்க!

வாழ்க தமிழ்! வாழ்க! வாழ்க!

639

(அறுசீர் ஆசிரிய விருத்தங்கள்]

354