பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 மாணவர் செயலை மறுத்தார் இவ்வணம்: தம்மை ஒருவர் தாழ்த்தின், மறித்து வெம்மை கொண்டு வெகுண்டு பேசின், 335 தம்முடைத் தூய்மையின் தரமே கெட்டிடும்; தம்குறை அறியத் தக்கவாய்ப்பு இராது; அறியா மையினல் அவர் செய் தாரெனக் கொள்ளல் வேண்டும் - என்பது அவ்ருறை. ஏந்தலை ஒருவர் இகழ்ந்த காலே, 340 ஒருவர் பெறநாம் ஒருபொருள் தந்திடின் பெறாது.அவர் மறுத்தால், பின்னர் அப்பொருள் நம்மையே சாரல்போல், நண்பரே! உமதுரை உம்மையே சாரும்; உணர்வீர் இதனை ! ஆனல், உமது செயலால் நண்பராம் உம்மை 345 இழக்க நேரும் வறுமை எய்தினேன் - என்று.அவர்க்கு உரைத்தே இனிது திருத்தினர். மருத்துவ உதவி, வயிற்றுப் போக்கால் வருந்தி மலத்தில் கிடந்த ஒருவரைக் கிட்டிச் சென்றே எடுத்துத் துரப்மை செய்தபின், எல்லா 350 மருத்துவ உதவியும் மகிழ்ந்து செய்தார். 332 இவ் வனம் - பின்வருமாறு. 333 மறித்து-திரும் ப, பதிலுக்கு. 334 வெம்மை கொதிப்பு. 340-343 ஒரு வர்க்கு நாம் கொடுக்கும் பொருளை அவர் ஏற்காவிடின், ஆப்புெரருள் நம்மையே சேரல் போல, நீர் எனக்குத் செய்த் இகழ்ச்சியை நான் ஏற்காததால், இகழ்ச்சி 'உம்மைய்ே சாரும். 344-345 நண்பர் ஒருவரை இழப்பது, ஒருவகை வறுமையாக உருவகிக்கப்பட் டுள்ளது. 257 வற்புறுத்தாமை புத்தர் தாம் வகுத்த நெறிகளை வற்புறுத்த வில்லை; அவ்வப் போழ்தில் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியும் இயங்கலாம் என்றார். 355 எல்லா மாந்தரும் எளிதாய் ஏற்கும் நல்ல நெறிகளே நல்கினர் ஐயர். ஐந்து விதிகள் துறந்தோர் துறவா தோர்க்கெலாம் பொதுவாய் ஐந்து விதிகள் அமைத்துத் தந்தார்: எந்த உயிரையும் எளிதெனக் கொல்லாமை, 360 காமம் இன்மை, கள் உண் ணுமை, பொய்யுரை யாமை, பொருள்திரு டாமைஎன்பன ஐந்தும் இயம்பிய விதிகளாம். புலால் உளண் பற்றிப் புகலுமாறு ஒருவர் கேட்ட போது கிளத்திய தாவது: 3 6 5 உயிர்க்கொலை சிறிதும் உஞற்றல் தகாது. புலால் ஊண் புசித்தல் பொருந்தாச் செயலே. ஐயம் ஏற்கும் காலை, அறியார் அளித்த புலாலை அவருளம் நிறைவுற ஏற்றுக் கொளலாம் எனினும், இதனை 363 புலால் ஊண் - மாமிச உணவு. 364 கிளத்தல் - சொல்லுதல். 365 உஞற்றல் - செய்தல். 367 ஐயம் ஏற்கும் காலை - பிச்சை எடுக்கும்போது, அறியார் - (புலால் புசித்தல் கூடாது என்பதை) அறியாதவர்கள். 368 அவர் உளம் நிறைவுற - அவருக்கு மனத்திருப்தி உண்டாக, – 17