பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அமர்த்திப் பரிசுகள் அளிக்கென, மைந்தன் திமிர்த்திலன் தலையை நின்றனன் எழுந்தே. 5 திரும்பிய இடமெலாம் தாமரைத் திருமுகம்; காணும் இடமெலாம் கார்முகில் கூந்தல்; பார்க்கும் இடமெலாம் பானல் விழிகள், கட்டுக் குலையாக் கவினுறு நகில்கள், பட்டுத் தளிரெனப் பளிச்சிடும் மேனிகள் 10 நண்ணும் இடமெல்லாம் நல்லசல் லாக்கள், வண்ணப் பட்டுடை, வகைவகை சால்வைகள், அணியாய்க் கைகளில் ஆர்க்கும் வளைஒலி, :கணிர்கணிர்: என்றே கறங்கும் சிலம்பொலி - இன்ன் சிறப்புகள் எல்லாம் அமைய, வண்ண வார்ப்பட வடிவச் சிலைகள் உயிர்பெற் றெழுந்தே உலவுதல் போலவும், மர்லினம், ஆடி வருவது நிகர்ப்பவும், மானினம் துள்ளி மன்னுதல் மான வும், i 5 அதி.ஆறு ஆதித்தன் எதிரில் வந்து நி بن fn aðrri : - ன் தன் ஆறனா தொடாமே அவன்த . . தீவிசு - இருக்கை. 3 அளிக்கென - அளிக்க என:கொடுப்ப்ர்ய் என்று சொல்ல (‘அ’ தொகுத்தல் வேறுபாடு). 6 கார்முகில் - கரிய மேகம் போன்ற. 7 பானல் - கருங்குவளை. 8 கவின் - அழகு; நகில் - முலை, மணி - உடம்பு. 11 சல்லா - ஒரு வகை மெல் - விட்வர் அணிவது). 12 ஆர்த்த்ல் - ஒலித்தல்; tår ،»2 که این خان- . ." x

இது வ ல் கணிர் ஒருவகை ஒலிக் குறிப்பு; 鷲 இத்தல் 18 நிகர்த்தல் - ஒத்திருத்தல், .1 ஆம்ன் இதில் ஃபொருந்துதல்; மான - ஒப்ப. 21 எழில் 6] கைகளால் கைகளில் கணக்கில் பரிசுகள் மைகலை யாயிடு மான்விழி யார்க்கு உளம் 25 கனிந்து வழங்கியே கைகள் சிவந்தான். குனிந்த தலையராய்ப் பெற்றுக் கொண்டே எட்டாக் கனியாம் இவனென உணர்ந்து கொட்டாவி விட்டுக் குமரியர் நகர்ந்தனர். கண்களும் கண்களும் கண்டுகொள் ளாமையால் 30 புண்கொள் உளத்தனாய்ப் புரவலன் நைந்தான். இருந்த பரிசுகள் எல்லாம் தீர்ந்தன. பொருந்தஅப் போதொரு பொன்மகள் சித்தார்த் தனுக்குச் சீர்முறை மாமனாம் கோலிய மன்னனின் குணமுறு மகளவள்; வந்தாள் 35. சாலவும் முல்லை சார்ந்த பெண்ணவள். கோடரி முடிச்சுக் கொண்டையின் வனப்பும், நாடரும் புருவ நயமுறு நெரிப்பும், நடையில் தளுக்கும், நகில்க ளால்இறும் இடையில் குலுக்கும், மேகலை இசைப்பும், 40 கண்களில் சிமிட்டும், காட்சியில் பகட்டும், மென் கை வளைகளின் மெல்லிசைப் புலம்பும், 23 கைகளால் - சித்தன் கைகளால் கைகளில் ஐபெண்களின் கைகளில், 24 மை கலையாய் இடுதல் - இமை பூசுவதே ஒரு கலை யெனும்படி பூசுதல்; மான் விழியார் '- மான்விழி போன்ற விழியுடைய பெண்கள் (உவமை). 28 கொட்டாவி விடுதல் - எண்ணியது கிடைக்காதென் வாய் பிளந்து சோர்தல். 30 புரவலன் - அரசன். 35 முல்லை - கற்பு. 36 கோடரி முடிச்சுக் கொண்டை - கோடரி போல் முடிக்கும் ஒருவகைக் கொண்டை. 38 இறுதல் - ஒடிதல் (முலைகளின் சுமையால் இடுப்பு +) 39 மேகலை - இடுப்பில் அணியும் ஒட்டியாணம். பகட்டு இறு மாப்பான மினுக்கு. 41 புலம்பு - ஒலி -