பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவில் இரவில்............. அவள் அந்தத் தெருமுனையில் நின்றுகொண்டிருந்தாள். அரையில் ஒரு வேஷ்டி, உடம்பில் முதுகுப்புறம் கிழிந்த மல் ரவிக்கை ஒன்று, அதன் மேல், கிழிந்துபோன வாழையிலைத் தார்போல, ஒரு மேலாப்பு; ஏதோ கிடந்தோ மென்ற பேருக்காக ஒட்டிக் கிடந்தது, ஒட்டியுலர்த்து முதுகெலும்போடு ஐக்கியமாகும் வயிற்றின் குழிவால், அவளுடைய வற்றிய மார்புகூடக் கொஞ்சம் விம்மியது போலத்தான். தோற்றமளித்தது. மற்றப்படி காதில், கழுத்தில் ஒன்றுமில்லை. உடையும், பார்வையும் அவள் ஒரு சரியான ‘மலையாளத்து அச்சி' என்பதைத் தெரியப் படுத்தின. . .' மலையாளத்தில் இன்று வயிற்றிற்கு மட்டும் பஞ்ச மில்லை; வாலிபர்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. பசியின் கொடுமையைச் சமாளிக்க முடியாமல் பட்டா ளத்தில் சாடினர், வாலிபர்கள். மலையாளத்துப் பெண்களின் பாடு திண்டாட்டமாய்விட்டது. பசிக்கும், பருவத்திற்கும் . இடையே வருந்தினர், பலர், wa3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/39&oldid=1270215" இலிருந்து மீள்விக்கப்பட்டது