பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஈ ல ஈட்டு சுந்தரமூர்த்திக்கு அன்றிரவுதான் சாந்திக் கல்யாணம், சுந்தர மூர்த்தி வெளிமுற்றத்தில் ஈஸிசேரில் கண்ணை, மூடியவாறே படுத்துக் கிடந்தான்; ஆனால் கண்கள் தான் மூடியிருந்தனவே தவிர, மனசு மூடவில்லை. மனசில் என்னென்னவோ சிந்தனைகள் உருண்டு புரண்டு கொண்டி ருந்தனர். எனவே அவனும் உருண்டு புரண்டு கொடுத்துக் கொண்டிருந்தான், ', . ' . ' உள்வீட்டுக் கடிகாரம் மணி பதிமூென்று அடித்து ஓய்ந்ததும் அவனுக்குத் தெரியும். பெரிய பெருமாள் கோவில் அர்த்தசாம சேவைக்காகச், சங்கு ஊதும் முழக்கமும் அவ்னுக்குக் கேட்கத்தான் செய்தது. - - அவன் தூங்கி விடவில்லை. “என்ன சுந்தரம், இங்கேயே படுத்துக் கிடந்தா? ரூமூக்குப் போ” என்று அவனது ஒன் றுவிட்ட அக்கா வந்து அவனைச் சத்தம் கொடுத்தாள்,... - சுந்தரமூர்த்தி திடுக்கிட்டுக் கண்ணைத் திறந்தான். அவனது நினைவுத் தொடர் அங்கேயே படீரென்று அறுந்து போன தன் காரணமாகத்தான் அந்தத் திகைப்பு........ எழுந்ததும் கண்ணணைத் திறந்து புறங்கைகளால் கசக்கிக் கொண்டாள். S

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/43&oldid=1270219" இலிருந்து மீள்விக்கப்பட்டது