பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்விற்கே ஒரு நாள் 46 கச, கா” என்று கரையும் சப்தம் கேட்டது. விடிந்துவிட்டதோ என்று ' சுப்பையா , முதலிப.:ார் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தார், வெளியிலோ, ஷவரிலுள்ளிருந்து விழும் நீர்க்கட்டிகளைப் போல, சுக்லபகாத்து நிலவு 'பொருபொரு'வெனச் சொரிந்து கொண்டிருந்தது. ஏதோ சொர்க்க சொப்பனம் போல், உலகம் அந்த அமைதியினூடே படுத்துக்கிடந்தது. நில வொளியைப் பார்த்து விடிந்துவிட்டது என்று ஏமாந்த அந்தக் காக்கை, அந்த நிர்மலமான . வானவெளியில் பீதியுடன் சிறகடித்துச் சென்றது. “சே! நிலவு இன்னும் இறங்கக்கூட இல்லியே. அதற்குள் எப்படி விடிஞ்சிரும்?" என்று மனதை உற்சாகப்படுத்திக் கொண்டார். பொடித்தடையை எடுத்துத் தடவிப் பார்தி தார். ஒரு நேரத்துக்குக்கூட, அதில் பொடி ' இல்லை, தடையை விரித்து அப்படியும், இப்படியும். தட்டி அதில் ஒட்டியிருந்த தூள் அனைத்தையும் தங்கத் தூளை பிரஷினால் துடைத்து ஒன்று சேர்ப்பதுபோல் ஒன்று கூட்டினார். அப்படியே, மூக்கண்டை மட்டையைப் பிடித்து, 'ஏry உறிஞ்சு உறிஞ்சினார். பொடித்தூள் முழுவதும் மூக்கினுள் ஐக்கியமாகிவிட்டது. " 'ங்கே” என்று . கனைத்து உற்சாகப்படுத்திக் கொண்டு, மீண்டும் வேலையைத் தொடங்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/85&oldid=1270261" இலிருந்து மீள்விக்கப்பட்டது