பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
யதார்த்த பிராமண
வேதாந்த விவரம்


வேதம்

வேதமென்னும் வார்த்தையின் உற்பவத்தையும், சுருதி யென்னும் வார்த்தையின் உற்பவத்தையும், அதன் தன் பொருட்களையும், அவைகளின் உற்பவத்திற்குக் காரணம் யாவரென்பதையும், முன்பு விசாரித்து பின்பு பிரம உற்பவத்தையும், பிராமணோற்பவத்தையும் விசாரிப்போமாக.

வேதமென்னுமொழி பேதமென்னு மொழியினின்று மாறியது. அதாவது - வடபாஷையில் பரதனென்பது வரதனென்றும், பைராக்கியென்பது வைராக்கியென்றும், பண்டி யென்பது வண்டி யென்றும், பாலவயதென்பது வாலவய தென்றும் வழங்குதல் போல், பேத வாக்கியங்களென்பதை வேத வாக்கியங்களென்றும் தமிழில் வழங்கி வருகின்றார்கள்.

அத்தகைய பேதவாக்கியங்கள் யாதென்பீரேல் ஜெகந் நாதனென்றும், ஜெகத்ரட்சகனென்றும், ஜெகத் குருவென்றும் வழங்கும் புத்தபிரானாலோதிய முப்பிடக மென்றும் திரிபீட வாங்கியங்களே திரிபேத வாக்கியங்களென வழங்கலாயிற்று. அப்போது வாங்கியங்கள் யாதெனில் :

ஸப்பபாபஸ்ஸ அகரணம்
குஸலஸ்ஸ உப ஸம்பதா
ஸச்சித்த பரியோதனங்
(ஏதங் புத்தான ஸாஸனம்)

அதாவது :- பாபஞ் செய்யாதிருங்கள், நன்மைக் கடைபிடியுங்கள், உங்கள் இதயத்தை சுத்தி செய்யுங்கோளென்னும், மூன்று வாக்கியங்களும் மூன்று பேதமாயிருந்தபடியால் திரிபேத வாக்கியங்களென்றும், பகவன் மூன்று வேத வாக்கியங்களை யோதுங்கால் அட்சரங்களுடைத்தாய