பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

21



பவகாரணம், துக்க நிவாரணமாகும் நான்கு வாய்மைகளை யுணர்ந்துவந்துள்ளார்கள்.

காக்கை பாடியம்

உடலுயிர் பொருந்தா லுள்ளத் தோன்றி
கடலுள் விரிவே மனமென வாய்ந்து
வடவிரி மனமாள் மதியெனப் பெருகி
திடம் பெறு வறிவாற் றேவராகினரே.

நல்வாய்மை, நற்காட்சி, நல்லூக்கம், நற்செய்கை, நல் வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைபிடி, நல்லுள்ளமாம் அஷ்டாங்க மார்க்கத்திற் சென்று ஞானவாசிரியராகும் அரஹத்துவை யடுத்து உபநயனமென்னும் உதவி விழியாம் ஞானக்கண் பெற்று ஊனக்கண்ணற்று உள்விழி பார்வையால், கழிமுனைக் கணலேறி ஜாக்கிரத்தில் சுழுப்தியாயபோது தசநாத முண்டாகி தானே தானே சுயம்பிரகாச உண்மெய்யனாகின்றான். இந்நிலையையே மெய்கண்டோனென்றும், மெய்யனென்றும் கூறப்படும். இம்மொழியையே பாலி பாஷையில், தானே தானே சுயம்பாதலை ததாகதமென்றும், மெய்யனை புத்தரென்றும், அழைக்கலாயினர். மெய்கண்டவுடன் பஞ்சஸ்கந்த விவகார ஆன்ம பற்றற்று புளியம் பழத்தினோடு போல் உடலுயிரென்னும் பெயரற்று அநித்திய அனாத்தும் நிருவாண நிலையடைகின்றான் என்று பெரியோர்களால் வரைந்து வைத்துள்ளது.

உபநயனம்

தாயினது கருப்பையில் குழவி கட்டுப்பட்டிருக்குங்கால் அது முட்டுவதும், உலாவுவதும் சகலருக்குத் தெரிந்த விஷயம். அவ்வகை யுலாவும் குழவிக்கு அதன் மூச்சானது உள்ளுக்கே யோடிக்கொண்டிருப்பதியல்பாம். அஃதெவ்வகையா யுள்ளுக்கே யோடிக்கொண்டிருப்ப தென்பீரேல் உந்தியாகும் கொப்பூழை ஆதாரமாகக் கொண்டு இடதுபுற மார்பின் உள்ளுக்கே மேலேறி இருகண்களின் மத்திய நாசிமுனையைத் தாவி சிரசின் உச்சியைக் கடந்து பிடரி வழியிலிறங்கி வலது முதுகின் புற கிழிந்து கொப்பூழென்னும் உந்தியிற் கலந்து நிற்குமென்றும் அந்நாடிக்குக் குண்டலி