பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

29



பிராமணனென்றும், அந்தணனென்றும், விவேகிகளா லழைக்கப்பெற்று, சருவசீவர்களுந் தேவனென்று வணங்கத் தக்க ஏழாவது தோற்றத்திருந்து, தனது சங்கத்தோர் யாவரையும் மழைத்து தான் பரிநிருவாணமடையுங் காலத்தை விளக்கி புளியம் ஒடுபோலும், பழம் போலும் புழுக்களினின்று விட்டில் வெளிவருதல் போலும், பயிரங்கமாம் தேகத்தினின்று அந்தர அங்கமாம் உண்மையொளியாய் வெளிவந்து விடுவான். தாயின் வயிற்றி நின்று பயிரங்கமாய் பிறந்த பிறப் பொன்றும், பயிரங்கமாந் தேகத்தினின்று அந்தரங்கமாக சோதிமயமாய் அறிவுருவோடு பிறந்த பிறப்பொன்றும் ஆக இருபிறப்பானது கொண்டு, பிராமணர் அந்தணரென்னு மகா ஞானிகளை இருபிறப்பாளரென்று வழங்கிவந்தார்கள். இதுவே புத்தகங்க அரஹத்துக்களிடம் பெற்ற உபநயனமாம் உள்விழிபெற்ற பயனும், சுருதிமுடிவின் பயனும், வேத அந்தத்தின் பயனுமாகும். பட்டினத்தார். நீற்றைப் புனைந்தென்ன நீராடப்போயென்ன நீ மனமே மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை மாமறை நூல் ஏற்றிக்கிடக்கு தெழுகோடி மந்திரம் என்ன கண்டாய் ஆற்றிற்கிடந்துந் துறை தெரியாம லலைகின்றாயே. நெஞ்சறி விளக்கம். செய்.11 காட்டினில் மேவுகின்ற கனபுழுவெல்லாம் பார்த்து வேட்டுவ னெடுத்து வந்து விரும்பிய கிருமி தன்னை கூட்டினி லடைத்துவைத்து குளவிதன் னுருவாய்செய்யும் நாட்டினி னீதாநாகை நாதரை வணங்கு நெஞ்சே. தேவர்கள் இத்தகைய தேகத்திலிருப்பதை யறு வெறுத்து புறமெய் வேறு, அக்மெய் வேறாகக் கழட்டிக் கொள்ளுவோர்களை சீவன் முத்தர்களென்று கூறப்படும். இஃதை யநுசரித்தே பட்டினத்தார் தனது சற்குருவாகும் புத்தபிரான் அரசனாக விருந்து குருவாகத் தோன்றி விளக்கிய மகத்துவத்தைப் போதிக்கின்றார்.