பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

க. அயோத்திதாஸப் பண்டிதர்



- மண்டல புருடன் சூடாமணி நிகண்டு பதினோராவது அதிகாரத்துள், சிவன், விஷ்ணு , பிரம்மன், ஜினன், புத்தன் என்று முற்கால தேவர்களை முறைபடி வகுத்து வைக்கப் பட்டி ருக்கின்றது. முதற் குறித்த நான்கு தேவர்கள் சரித்திரங் களையும் அவர்கள் காலத்தில் வழங்கி வந்துள்ள நான்கு வகை பிராமணர்கள் நிலைமைகளையும் அப்பிராமணர்கள் என்னும் தேவர்கள் அடையும் மோக்கங்களையும் அப்பிராமண தேவர்களின் தொழுபவர்களாகிய பொய்ப்புலவர்கள் முதற் காட்டிய நான்கு மதப்பித்து தேவர்களோடு, பகவன் புத்தரையும் ஒரு மாயாரூ பி என நம்பி சேர்த்துக்கொண்டிருப்பதையும் விவேகிசள் அவசியம் அறியவேண்டும். சூடாமணி !!-வது நிகண்டு பகவனே யீசன் மாயோன் பங்கயன் ஜினனே புத்தன் என்று குறிப்பிடுவதால், பகவன் புத்தருக்கு முந்தி பிறந்த தேவர்களெல்லாம் நியாய ரஹிதர்களென்று சொல்லலாம் அவர்களுடைய மேரை மரியாதைக ளெல்லாம் புராண குப்பைகளில் தெள்ளி எடுக்கலாம். அவர்களுக்கு அணியப் பட்டுள்ள அலங்காரங்க ளெல்லாம் நம்மை வருத்தியதேயாகும். நம்மை ஒரு புழுக்கூட்டங்களாக நடத்தி யிருக்கின்றார்கள். தேவர்களென்ற பெரியார்களே முறையின்றி நடந்துள்ளார்கள். நன்றாகச் சொல்லவேண்டு மானால் மிருகத்தைவிட கேவலமாக இருந்தார்கள். நான்கு தேவர்களில் சிறந்து பிராமணன் என்று அழைக்கப்பெற்றவர் சிவன். இவருக்கு ஆபரணம் பாம்புகள். மேற்போர்வை யானைத்தோல், கீழுடை புலித்தோல், ஒரு கரத்தில் சூலம், ஒரு கரத்தில் உடுக்கை, ஒரு கரத்தில் அக்கினி பாத்திரம், ஒரு கரத்தில் மான், பூசுவது சாம்பல், ஏறுவது மாடு, வசிப்பது சுடுகாடு, புத்திர பேறு யானைக் குட்டி., நடக்கை நாவு கூச்சுகின்றது. ரூ பம் கண்களை மூடிக்கொள்ளச் செய்கிறது. இத்தகைய தெய்வம் அல்லது தேவர்கள் தான் உலகத்தில் சிறந்தவர்களாம். இவர்களைக் காண்பதுதான் மோக்ஷ பாக்கிய மென்றும் நித்திய ரூ பம் என்றும் எழுதப்பட்டி ருக்கிறது. இவர்கள் பெயரால் தான் உபநயனம் பெற்று உயிர் உள்ள மட்டும் பூலோகதேவராகவும், உயிர் துறந்து வானுலக தேவர்களாகவும் மாறி விடுகிறார்களாம். 2.லகத்தில் ஜீவித்துள்ள