பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

க. அயோத்திதாஸப் பண்டிதர்



இவ்வகையாக ஆத்து மாவென்னும் வார்த்தைக்குப் பொருளே ஏதுமற்று அதின் நிலையற்றுமிருப்பதால், ஒரு மனிதன் வானத்தையும் மண்ணையும் காற்றையும் சூரியனையும் ஆத்துமமாக வெண்ணுவதால் என்ன பலனடை வானென்பதும் விளங்வில்லை, இந்நான்கு வேதங்களில் கூறியுள்ள பிரமமின்னதென்றும் ஆத்து மா வின்னதென்றும் நிலையற்றிருப்பதை தெரிந்து கொண்டோம். வேதாந்தம். இத்தகைய பிரமத்தையும் ஆத்துமாவையும் அறியக்கூடிய வேத அந்தத்தையும் விசாரிப்போமாக. அதர்வண வேதம் 165-வது பக்கத்தில் உபநிடதங்க ளென்பது வேதாந்த சாஸ்திரங்களெனக் குறிப்பிட்டிருக்கின்றது. 167-வது பக்கத்தில் வேதாந்த சாஸ்திரங்களெல்லாம் உபநிடதங்களின் பேரில் ஆதாரப்பட்டதென வரைந்திருக் கின்றது. இவற்றினாதரவாலும், நான்கு வேதங்களிற் கூறியுள்ள மந்திரங்கள், பிரமாணங்கள், உபநிடதங்கள் என மூன்று பிரிவில் உபநிடதங்களைக் கடைபாகமாகக் கொண்டு வேத அந்தங்க ளென வகுத்துக்கொண்டார்கள். வேதம், வேத அந்தமெனும் இரு வகுப்பில், வேதத்திற் கூறியுள்ள பிரமமும், ஆத்துமமும் நிலையற்றிருப்பதை தெரிந்துக் கொண்டோம். உபநிடதபிரமம் இனி வேத அந்தமாகும் உபநிடதங்களிற் கூறியுள்ள பிரமத்தையும் அதன் நிலையையும் அதன் பலனையும் விசாரிப் போமாக. உபநிடதங்களில் 53 வகை யிருந்ததாக அதர்வண வேதத்திற் கூறியிருக்கத் தற்காலம் இருநூற்றிச் சில்லரை உபநிடதங்களுள்ளதாய் விளம்புகின்றனர். அத்தகைய விளம்பல் உளதாயினும் இலதாயினுமாகுக.