பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

க. அயோத்திதாஸப் பண்டிதர்



(அவருடன் அறுபத்தி மூன்று நாயன்மார்கள் இருப்பதாகவும்) உற்சவங் கொண்டாடி வந்தார்கள். அது இக்காலமும் வழங்கி வருகின்றன. ஜீவகசிந்தாமணி 2920 செய். மாசித் திங்கண் மாசின முன்னம் மடிவெய்த ஊசித் துன்னா மூசிய வாடை யுடையாகப் பேசிப் பாவாய் பின்னு மிருகை அகலேந்தக் கூசிக் கூசி நிற்பர் கொடுத்துண்டறியாதார். கபால மென்ற பதம் கபோல மெனவும் கபோலீஸ னெனவும் வழங்கப்பட்டது. திரு மயிலாபுரி மடம் அல்ல மாபிரபு மடமெனவும் குழந்தைவேற்பரதேசி மடமெனவும் பெயர் பெறும். இங்ஙனம் வருடந்தோறும் நிறைவேறி வரும், கபோலீஸன் உத்ஸவத் தைக்காண, சுரமை நாட்டின் தலைநகரமாகிய போதனம் என்னுங் கார்வெட்டி நகரத்து அரசனாகிய, கிரீட்டன் என்னும் மணிவண்ணன், தனது மனைவி பூம்பாவையுடன் விஜயமாகியிருந்தான். பூம்பாவை நந்தவனத்தி லுலாவும் போது நாகங்கடித்து மரணமடைந்தாள். அக்கால் வள்ளுவர்கள் குவிந்து துக்கங் கொண்டாடினார்கள். இதை அவ்வருட கபோலீசன் துதியில் பூம்பாவையை அரவந்தீண்ட அவள் மரணமடைந்தாள் என்று பாடி வைத்துள்ளார்கள். சாக்கையர்கள் பாடிய கரபோலீஸன் பஞ்சரத்ந தியானம். ஜகதல மெலாம்புகழ் சாக்கையர்க் கொண்டாடும் சக்ரவர்த்தித்திரு மகன் ததாகதத் துறவையித் தரணியோர் கூர்ந்தினி சாற்றவு மெளி தாகுமோ மகவென வுதித்துமக ராஜநிலையேற்றுவடி வழகுநிறை யிந்தி ராணியும் வளர்தோழி மேனகை யூர்வசி திலோர்தமை யரம்பையொடு மகவிடுத்து சுகசயன வாடைசுக போஜன மகற்றிமதி துய்யமா சிப் பூரணை துறவுண்டு மும்மதில் கடந்து பரி யேறியே சுத்தகா னக முறைந்து