பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S 8 க. அயோத்திதாஸப் பண்டிதர் சுயம்பு நிலையால் புத்தரை சொக்கநாத ரென்றும், பிறவியற்ற நிலையால் புத்தரை அத்தனென்றும் வழங்கி வருகின்ருர்கள். அதுகொண்டே நமது ஞானத்தாய் அகக்களிம்பற்று சொக்கமானவர் அத்தம் பெறுவரென்று கூறியுள்ளாள். சொக்க மென்னுமொழி சுயம்பாம் சுவர்க்க மென்னு மொழி யினின்றும், அத்தமென்னு மொழி முடிவாம், வீடு பேற்றினின்றும், தோன்றியவைகளாம். 36. சோம்பரென்பவர் தேம்பித்திரிவர். சோம்பர் - யாதொரு தொழிலு மற்ற சோம்பேறி, என்பவர் - என்றழைக்கப் பெற்றவர்கள், தேம்பி - துக்க மதிகரித்து, திரிவர் - அலைந்து கெடுவாரென்பதாம். அதாவது மனிதவுருவெனத் தோன்றி ஒர் தொழிலின் றியும், யாதாமோர் முயற்சியின்றியும் தேகத்தை யசையாது சோம்பலில் இருத்தியுள்ளவன் உண்ண யுணவிற்கும், உடுக்க வுடைக்குமின்றி வீதிகடோறுந்திரிந்து பசியின் கொடுரத் தாலும், துக்கவிருத்தியாலும் நலிந்து கெடுவான். ஆதலின் ஒவ்வோர் மனிதனும் சோம்பலின்றி தேகத்தை வருத்தி சம்பாதித்துண்பதே மனித தோற்றங்களுக்கு அழகாதலின் ஒவ்வோர் மனிதனும் தனக்குள்ள முயற்சியையும் உழைப்பை யும் நோக்காது சோம்பித்திரியலாகாதென்பது கருத்து. 37. தந்தைசொன்மிக்க மந்திரமில்லை. தந்தை - தன்னையின்ற தகப்பனும் தனக்கு நீதிவழி காட்டியுள்ள சற்குருவாகிய தகப்பனும், சொல் - சொல்லிய மொழிகளுக்கும், சுருதிவாக்கியங்களுக்கும் மிக்க - மேலான, மந்திரம் - ஆலோசனை, இல்லை - வேறில்லையென்பதாம். அதாவது, சற்குருவின் திரிபேத வாக்கியங்களாம் நீதிநெறி ஒழுக்கங்களைத் தழுவிவந்த தனது தந்தையால் சொல்லிக் கொடுத்துவரும் புத்திக்கும், மேற்பட்ட ஆலோசனை யாதுமில்லையென்பது கருத்து.