பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 30 க. அயோத்திதாஸப் பண்டிதர் அவனுக்கு நீராட்டலை அங்க சுத்தமாகவும், அன்னமூட்டுதலை ய பிஷேக மாகவும், அவன் கரங்களைப் பிடித்துப் பூசுதலே பூசையாகவும், அவன் உத்தரவளித்துள்ள வாக்கியங்களை மந்திரமாகவுமெண்ணி நடத்தலே சிறப்பென்பது கருத்து. 13. விலைமகட்கழகு மேனிமினுக்குதல். விலைகொடுத்து வாங்கும் அடிமைப் பெண்களுக்கு அழகு யாதெனில், எக்காலுந் தங்கள் தேகத்தை சுத்தத்தில் வைக்க வேண்டு மென்பது கருத்து. - 14. அறிவோர்க்கழகு கற்றுணர்ந்தடங்கல். அறிவுள்ளோரென்று கூறுதற்கு அழகு யாதெனில், தான் கற்ற கலை நூற்களுக்கு அளவாய் அடங்கி சகலருக்கும் உபகாரியாக விளங்குதல் அன்றேல், சகலராலும் நல்ல வனென்று நன்கு மதிக்கப் பெறுதலே சிறப்பென்பது கருத்து. 15. வரியோர்க்கழகு வருமையிற் செம்மைய். ஏழைகளாகி மிக்க துக்கத்தை யநுபவிப்போர் நடந்துக் கொள்ளவேண்டிய அழகுயாதெனில், இந்த தேகம் மறைந்து மறுதேக மெடுக்கினும் அதனிலேனும் சுகத்தை யநுபவிக்கும் படி யாக யெடுத்த தேகத்தின் துக்கத்தை மிக்கக் கருதாது நன்மார்க் கத்தில் நடத்தலே சிறப்பென்பது கருத்து. 16. (அதல்ை) தேம்படு பனையின் றிரட்பழத் தொருவிதை வானுறவோங்கி வளம்பெற வளரினும் ஒருவர்க்கிருக்க நிழலாகாதே. ஆதலின் பனை விதையானது மிக்கப் பருத்திருப்பினும் அதன் மரமானது ஒருவர் தங்கி நிற்பதற்கு நிழலிராது என்பது கருதது.