பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 க. அயோத்திதாளலப் பண்டிதர் 22. கொண்டோரெல்லாம் பெண்டீருமல்லர். குடும்பத்திற்கு வேண்டுமென்று கொண்டப் பெண்கள் யாவரும் குடும்பிகளாகமாட்டார்கள். காரணம், சிலப் பெண்கள் குடும்பத்தைக் கலைக்கும் வேர்ப்புழுவாகத் தோற்றுவார்கள். 23. அடினுமாவின்பால் சுவைகுன்ருது. பசும்பாலினை சுண்டக் காய்ச்சினும் அதனது சுவை யானது குன்ருது என்பது கருத்து. 24. சுடினுஞ் செம்பொன் றன்ைெளிகெடாது. சாம்புனதமாம் பொன்னை நெருப்பிலிட்டு மேலுமேலு முருக்கினும் அதன் பிரகாசங் குறையமாட்டா தென்பது கருத்து. 25. அரைக்கினுஞ் சந்தனந் தன் மணமாருது. சந்தனக் கட்டையை நீர் வார்த் துரைக்கினும் அதன் பரிமளம் மாருது என்பது கருத்து. 26. புகைக்கினுந்தண்கடல் பொல்லாங்கு கமழாது. குளிர்ந்த சமுத்திர நீரை புகையெழக் கொளுத்தினுலும் கொடிய நாற்றமெழாது என்பது கருத்து. 27. கலைக்கினுந்தண் கடல் சேருகாதே. குளிர்ந்த கடல் நீரை எவ்விதம் கலக்கினலும் சேறு காண மாட்டாது காரணம், அதனதன் செயலும், குணமும் அதனதன் நிலையிற் காணும். அதனல், 28. பெருமெயும் சிறுமெயுந் தன் செயலாமே. ஒர் மனிதனைப் பார்த்து இவன் பெரியோன் மேன்மக னென்று கூறுவது, மற்ருெருவனைப் பார்த்து இவன் சிறியன் கீழ்மகனென்று கூறுவதும், அவனவன் நற்கரும துற்கருமக் கூற்ருதலின் சகலமும் தன் செயலாலாவ தென்பது கருத்து.