பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1Ꮾ 2 க. அயோத்திதாளலப் பண்டிதர் களையுந் தாழ்த்தி நிலைகுலையச் செய்யுங்கால், மகமதிய துரைத் தனத்தார் வந்து குடியேறி, மிலேச்சர்களின் மித்திரபேதத்தால் மகமதியர்கள் செய்துவந்த இடுக்கண்களுக் கஞ்சி திரிசிரபுரத் திலும் நாகைநாட்டி லு மிருந்து புத்த தருமத்தைப் பரவச் செய்துவந்த தமிழ் வித்துவான்களாகும் பாணர்களும் யாழுடன் இசைகலந்து பாடும் யாழ்ப்பாணர் களும் இலங்கை முதலிய தீவுகளுக்குக் குடியேறினவர்கள் நீங்கலாக மற்றக் குடிகள் மகமதியர் மதத்தைத் தழுவியும் நின்றுவிட்டபடியால், நாகை நாட்டு நாகைநாதர் வியாரத்திருந்த பொன்சிலைகளைத் திருடிக் கொண்டு போய் விற்பனைச்செய்து பூரீரங்கத்துள்ள புத்த மடத்தை மாறுபடுத்திவேறுவகைக் கட்டிடங்களையும் மதில்களை யுங் கட்டிக்கொண்டார்கள். இதன் மத்தியில் போர்ட்ச்சுசீய துரைத்தனத்தார் வந்து குடியேறியபோது வேற்கண்ணியம்மன் வியாரமும் பாழ டைந்து நிலைகுலைந்தும் வருடந்தோறும் ஆடி மாத பெளர்ணமி யில் அம்மனை தெரிசிக்கும்படி துார தேசங்களிலி ருந்து வருங் குடிகள் வழக்கம்போல் வந்தும் திகைத்து நிற்பவர்களைக் கண்ட ப்ோர்ட்ச்சுசீய குருக்கள் அதே யிடத்தில் தங்கள் மதக் கோவிலொன்றைக் கட்டி அம்மனைச் சிந்திக்கும்படிச் செய்து அம்மன் பெயரால் வரும் தட்சணை திரவியங்களை தன் மஞ் செய்யாமல் தங்கள் சுயப்பிரயோசனங்களுக்கெடுத்துக் கொண் டிருக்கிருர்கள். இதன் சரித்திர பூர்த்தியைத் தெரிந்துகொள்ள வேண்டியவர்கள் நாகைநாதர் பொன்விக்கிரகங்களை யபகரித் துக்கொண்ட சங்கதியை சிலாசாசன பதிவின் புத்தகத்திலுந் திருமங்கையாழ்வார் சரித்திரப் புத்தகத்திலுந் தெரிந்து கொள்வது டன் வேற் கண்ணியம்மன் வியார மாறலை கூடி சிலாசாசன புத்தகத்திலும் இலங்காதீவத்து வித்தியாதன சாலையிலுள்ள போர்ட்ச்சுகீயர் சரித்திரத்திலுந் தற்காலம் ஆடிமாதந்தோறும் நிறைவேறிவரும் அங்கப்பிரதட்சண வனுபவச் செயல்களினலுந் தெரிந்து கொள்ளலாம். புத்த, தன்ம சங்கமென்னுந் திரி மணிகளையே திரி சிரமாகக் கொண்ட திரிசிரபுரத்தில் பூரீ அரங்கர்மடமென்றும் அழகர் மடமென்றும் வழங்கிய இந்திரவியாரமும் நாகப் பட்டிண நாகைநாதர் வியாரமும் மாறுபட்டதுபோல,