பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I64 க. அயோத்திதாஸப் பண்டிதர் சுகவாழ்க்கை யுற்றிருப்பதைக் காணும் பராய சாதியோர் இவ்வொழுக்கைக் கெடுக்க வேண்டு மென்னும் பொருமை யில்ை தங்களால் ஏற்படுத்திக்கொண்ட கசிமல சாதிக்கட்டு களினல் ஒருவர் பொங்கலை ஒருவருடன் சேர்க்கவிடாமலும், சாதங்களை ஒன்ருகக் கொட்டவிடாமலும் ஆடுகளையும் மாடுகளையுங் கோழிகளையும் பலிகொடுக்கும்படி செய்து நல்லொழுக்கங்களை மாற்றிவிட்டார்கள். இவ்வகைப் பாழுக்கெல்லாம் பராய ஜாதியாராகிய பார்ப் பார்களே காரணமா யிருந்து, பகவன் புத்தரையும், புத்ததர்ம போதகர்களையும், தர்ம சாrயக்காரர்களாகிய திருவள்ளுவ நாயனரையும், ஒளவையார் என்னும் கிராமதேவியையும், புத்ததர்ம வொழுக்கத்தார்களையும் பறையர் பறையர் என்று இகழ்ச்சிச் செய்ததல்லாமல், சோழனட்டில் செத்த மாடுகளைத் தின்னும்படிச் செய்தும், வதைத்தும் வந்திருக்கின்ருர்கள். சாம்பவனர் ஞானவெட்டி 494-செப் இவ்வித மென்றறியா ருலகினி லெந்தன் குலத்தை யிகழ்ச்சிகள் பேசினர் வந்தவிதி யென்றறியாத மாந்தர்கள் மாலப் பறையனென்றே சோழனூரினில் மாடுகள்செத்து மடிந்ததைக் கண்டவ ரோலமென்றே யதை யுண்ணும்படிச் செய்தார் பாடுபட்டுப் பலன்காணு தழியுமிப் பாவிகளெங்கள் பரநிலை காண்கிலர். என்று நம் மிந்திய சகோதரர்கள் புலம்பி யிருக்கின்ருர்கள். ஆரிய பார்ப்பனர்கள் நம் மூதாதைகளைச் செய்த உபத்திரவம் இத்தனை என்று சொல்லி முடியாது. மாடுகளை மந்தையில் மடக்கிவைப்பது போலும், கள்ளர்களைக் கழுவில் கொல்வது போலும், அரசர்களைக் கொண்டும் சீமான்களைக் கொண்டும், வெளியூர்களிலிருந்து இந்தியாவில் குடியேறிய கமதியர்களைக் கொண்டும், ஆங்கிலேயர்களைக் கொண்டும் நம்மை அடக்கி நமது ரத்தத்தையும் நமது சுயமரியாதையான பகுத்தறிவையும், நமது சுத்த சீலங்களையும் கரும்பிலிருந்து சாறு எடுப்பதுபோல் நம்மை நசுக்கிக் கசக்கியழித்து, நமது தெய்வ சிந்தனையை மாற்ற வங்காள தேச இராணிக் கதையையும், மதுராபுரியைச் சார்ந்த