பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 க. அயோத்திதாஸப் பண்டிதர் திரிபேதமென்றும், திரிபீடமென்றும் வழங்கிய சுருதி மொழிகளை கலைநூற்களில் வகுத்து நூனெறியென்றும், செய்யுட்களில் வகுத்து பாநெறியென்றும், அரசர்கள் செவ்வி யக் கோல் வழியில் வகுத்து கேனெறியென்றும், பொதுவாய் நீதிநெறியில் வகுத்து நீனெறி என்றும் போதித்துள்ளவற்றில் உலகெங்குஞ் சூழ்ந்துள்ள சருவ சீவர்கண் மீதுங் கருணை வைத்துக் காக்கும் நெறியே விசேஷ நெறியாதலின் நமது ஞானத்தாய் சக்கர நெறி நில்லென வற்புறுத்திக் கூறியுள்ளாள். சீவகசிந்தாமணி நூனெறி வகையி நோக்கி நுண்ணுதினுழைந்து தீமெய் பானெறி பலவுநீக்கி பரிதியங் கடவுளன்ன கோனெறி தழுவி நின்ற குணத்தோடு புணரின் மாதோ நீனெறி வகையினின்ற நல்லுயிர்க் கமிர்தமென்ருன். 44. சான்ருேரினத்திரு. சான்ருேர் - சகலராலும் நன்கு மதிக்கும், இனத்து - கூட்டத்தாரிடத்து, இரு - நீ சேர்ந்து வாழக்கடவா யென்பதாம். சான்ருே ரென்பார் சகல மக்களாலும் மேலோர் மேதாவிய ரென்று சான்றுதற் குரிய மேன் மக்களாகும் சாந்தமிகுத்தோர்களேயாவார். சகல நற் கிரித்தியங்களுக்கும் சான்ருகும் மேன் மக்களாம் நல்லினத்தோரையடுத்து வாழ்வதி ல்ை தனக்குள்ள பொய்யும், களவும், கொலையும், காமமும், வெறியுமற்று மெய்யும், வீகையும், காருண்யமும், சாந்தமும், நிதானமும் பெருகி நிருவாணமார்க்கமும் சுருக்கமாக விளங்கும். ஈதன்றி தன்னையின்ற தாயானவள் எக்காலும் அன்பு கொண்டொழுகுபவளாயினும் உமது புத்திரன் மேன்மக்களாம் விவேகி களையடுத்து கலைநுாற்களைக் கற்று சாந்தரூ பியாய் சகலராலும் நல் லோனென்று கேழ்விப் பட்டவுடன் யீன்ருள் அகமகிழ்வையும் அன்பையும் சொல்லத் தருமோ ஒருவராலுஞ் சொல்லத்தரமன்ரும். ஆதலின் நல்லினத்தைச் சார்ந்தொழுகுஞ் சாட்சியே நன்றென்று கூறியுள்ளாள்.