பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 க. அயோத்திதாளலப் பண்டிதர் 58. துன்பத்திற் கிடங்கொடேல். துன்பத்திற்கு - உபத்திரவமுண்டாவதற்காய, இடம் - ஆதரவை கொடேல்-நீ எக்காலுங் கொடாதே யென்பதாம். அதாவது, சூதாட்டத்திற்கு யிடங் கொடுத்தலுந் துன்பம் கொலைபாதகனுக் கிடங்கொடுத்தலுந்துன்பம், கள்ளருந்தும் களியாட்டலுக் கிடங்கொடுத்தலுந் துன்பம், விபசாரிகளுக்கு வீடு கொடுத்துவைத்தலுந் துன்பம், பொய்யைச் சொல்லித் திரிபவ னென்றுணர்ந்தும் அவனுக்கிடங் கொடுத்தலுந் துன்பம், ஈன செயலை யுடையார்க்கு இல்லிடங் கொடுப்பின் அதிகாரிகளால் அவர்களுக்குந் துன்பம், இல்லங் கொடுப்பவ னுக்குந் துன்பம் உண்டாவது நிட்சயமாதலின் துன்பத்தை யுண்டு செய்யுஞ் செயலுக்கு யிடங் கொடேலென்று வற்புறுத்தியுள்ளாள். காக்கை பாடியம். வானவர்க்கரசன் வாய்மை யுணர்ந்து ஈனச் செயலுக் கிடந்தராதகற்றி மோனவரம்பி லுற்று நிலைத்து ஞானத் தானம் நல்குவரன்றே. 59. தூக்கிவினை செய். தூக்கி-சீர்தூக்கி, வினை-ஒவ்வோர் தொழிலையும், செய்செய்யக் கடவாய் என்பதாம். நீ செய்யப்படும் ஒவ்வோர் தொழிலையும் சீர்தூக்கி நிதானித்துச் செய்யவேண்டு மென்பதாம். குறுந்திரட்டு. "ஆராய்ந்து செய்பவனே யறிவுள்ளோனம் அடக்கமறிந்தடைபவனே யருளுள்ளோனம்" 60. தெய்வமிகழேல். தெய்வம்-தேய்வகமாம் உள்ளொளி கண்டோரை இகழேல் - நீ தாழ்வு செய்யாதே என்பதாம்.