பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 க. அயோத்திதாளலப் பண்டிதர் மக்களுக் கழகாம், ஆதலின் மோகத்தை முனியென்று வற்புறுத்தியுள்ளாள். 98. வல்லமெய் பேசேல். வல்ல-மிக்க சாமார்த்தியமுடைய, மெய்-தேகியென்று, பேசேல்-பலருமறியக் கூருதே யென்பதாம். அதாவது மாமிக்கோர் மாமியுண்டென்பதை யுணர்ந்து, எமக்கு மேற்பட்ட வல்லமெய்ப் புருஷனில்லை யென்று கூறுவான யின் அவனுக்கு மேற்பட்ட வல்லமெய்யன் அழித்து விடுவான். ஆதலின் எத்தகைய வல்லமெயோராயினும் தனது வலத்தை பலரறிய கூருதிருப்பதே சிறப்பைத் தருமென்று விளக்கியுள்ளாள். அறப்பளிசுர சதகம். தனக்கு வெகு புத்தியுண்டாயினு வெருெருவர் தன்புத்தி கேழ்க்க வேண்டும் தானதிக சூரனே யாயினுங் கூடவே தள சேகரங்கள் வேண்டும் கனக்கின்ற வித்துவா யிைனுந்தன்னினுங் கற்ருேரை நத்தவேண்டும் காசினியை யொருகுடையி லாண்டாலு வாசலி கருத்துள்ள மந்திரி வேண்டும். 99. வாது முற்கூறேல். வாது - தருக்கம் புரிவதில், முன் - முன்பு, கூறேல் - யோசி யாது பேசாதே யென்பதாம். அதாவது குற்றங் கூறுதலும், கூறும் பொருள் விளங்காது கூறுதலும், கூறியதைக் கூறுதலும் மிகப்பட கூறுதலும் முன் கூறியவற்றைக் கூறுதலும் முன் கூறிய பொருளுக்கு மாறு கொள பொருள் கூறுதலும் முன்மொழிக்கு பின்மொழி விரோதிக்கக் கூறுதலும் நூலுக்குக் குற்றமாதல் போல், வாதாகுந் தருக்கத்தில் யோசியாது முன் பேசலாகாதென்பது கருத்து. துரிதத்தில் முன் பேசலால் எதிரி கொணர்ந்தவை இலக்கிய தருக்கமா இலக்கண தருக்கமா மதோ தர்க்கமா வென்பது வீணே விளங்காது விரிந்து போம். அவற்ருல் எடுத்த