பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் நிருவாணம் பரகதி, சிவம், முத்தி, அமுதம் என வழங்கி வந்தார்கள் நாளது வரையிலும் வழங்கி வருகின்ருர்கள். 102. உத்தமன யிரு உத்தமய்ை-உன்னை சகலரும் நல்லவனென்று சொல்லத் தக்கவய்ை, இரு - நீ வீற்றிருக்கக் கடவா யென்பதாம். மக்களுள் மத்திபனென்றும், உத்தமனென்றும், அதம னென்றும், வழங்கக்கூடிய நிலையில் அதமனையும், மத்திபனையும் நீக்கி உத்தமனையே உலகங் கொண்டாடுவது இயல்பாதலின் ஞானத்தாய் உத்தமயிைருமென்று கூறியுள்ளாள். 103. ஊருடன் கூடிவாழ். ஊருடன் - மதுக்களாம் கிராம வாசிகளுடன், கூடிசேர்ந்து, வாழ் - வாழக்கடவா யென்பதாம். அதாவது ஒருவருக்கொருவர் விலகி வாழ்க்கைப் புரிவதில்ை ஆபத்துக்குதவாமல், அல்லலடைய நேரிடுமென்ற றிந்த ஞானத்தாய், மக்கள் ஒருவருக்கொருவர் உபகாரிகளா யிருக்க வேண்டுமென்னுங் கருத்தால் குடிகள் சேர்ந்து வாழ்க்கைபெற ஊருடன் கூடி வாழென்று கூறியுள்ளாள். மேன்மக்கள் வாக்கு தவிராது சேர்ந்து வாழ்ந்துவந்த பெளத்த தன்ம அரசர்களும் குடிகளும், வாழ்ந்த யிடங்களை சேரி, சேரி யென்று வழங்கி வந்தார்கள். 104. வெட்டெனப் பேசேல். வெட்டென - மனந் துண்டிக்கத்தக்க கடின வார்த்தைகளை, பேசேல் - மறந்தும் பேசாதே யென்பதாம். கடின வார்த்தைகளில் அனந்தக் கேடுண்டாவதை யுணர்ந்த ஞானத்தாய் வெட்டெனப் பேசேலென்று விளக்கிக் கூறியுள்ளாள்.