பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரீ புத்தாயநம: தென்னிந்திரர் தேச புத்ததர்ம சாகூவியக்காரர்களில் ஒருவளாகிய பாரதமாதா ஒளவையார் எனும் பூரீ அம்பிகையம்மன் அருளிச்செய்த இரண்டாம் வாசகம் திருவாளர். க. அயோத்திதாஸ் பண்டிதர் உரை குன்றைவேந்தன் காப்பு. குன்றை வேந்தன் செல்வனடி யினை யென்று மேற்றித் தொழுவோமியாமே. குன்றை வேந்தன் - மலைக்குன்றில் வாழரசனென்றும், செல்வன் - அழியா சம்பத்தனென்றும் வழங்கப் பெற்ற புத்த பிரானின், அடியினை - செந்தாமரைப் பாதங்களை, என்றும் - எக்காலுமும், ஏற்றி - போற்றி, தொழுவோம் - வணங்குவோம், யாம் - யாங்கள் என்றவாறு. அரசன் மரத்தடியில் உட்கார்ந்திருந்தது கொண்டு அரசன் மரம், அரசமரமெனக் காரணப் பெயரைப் பெற்றது போல், விம்பாசார வரசன் ஆளுகைக்குட்பட்ட ஒர் குன்றின் மீது சித்தார்த்தியாம் அரசன் வீற்றிருந்து சத்திய தன்மமாம்