பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 8 I 2. ஆலயந்தொழுவது சாலவுநன்று. ஆலயம் - முதற்றெய்வமாகக் கானுந்தந்தை தாயாரை மனேவமைதி பெற, தொழுவது - வணங்குவது. சாலவும் - எக்காலும், நன்று - சுகமென்பதாம். அதாவது தந்தை தாயாரை தெய்வமாகக் கொண்டவன் அவர்கள் காப்பையும், இரட்சையும், நன்றியறிந்து அவர்க்கன் பான ஆதரணையை யிதயத்துான்றி வணங்கியும், அவர்களை அன்புடன் போவித்தும், வருவாயிைன் அச்செயலைக் கண்ணுற்றுவரும் இவனது மைந்தனும் அன்னைத் தந்தையரை தெய்வமெனக்கொண்டு, ஆலயந்தொழுது வருவான். அங்கன மின்றி அன்னையையும் பிதாவையும் அன்புடன் போஷித்து ஆலயம் பெறத்தொழுவதை விடுத்து, கல்லையுஞ் செம்பையும் தொழவேண்டு மென்பது கருத்தன்ரும். பட்டினத்தார். சொல்லினுஞ் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும் அல்லினு மாசற்ற வாகாயந்தன்னிலு மாய்ந்துவிட்டோர் இல்லினும் அன்பரிடத்திலு மீசன் இருப்பதல்லால் கல்லினுஞ் செம்பிலுமோ யிருப்பானென் கண்ணுதலே. கடவுளந்தாதி. - வீண்பருக்கெத்தனைச் சொன்னலும் பொய்யது மெய்யென்றெண்ணுர் மாண்பருக்குப் பொருளாவதுண்டோ மதுவுண்டு வெறி காண்பரைக் கும்பிட்டு கல்லையுஞ் செம்பையுங் கைதொழுது பூண்பவர் பாதக பூதலத்தொல்லை பிடித்தவரே. என்று மகா ஞானிகள் கூறியுள்ளவற்றை நாம் பின்பற்ற வேண்டி யதன்றி, அஞ்ஞானிகளின் கருத்தை பின்பற்ற லாகாதென்பது கருத்து, பாலிபாஷையில் ஆலயமென்றும், ஆவிலயமென்றும் மனேலயமென்றும் வழங்கும் வாக்கியங்கள் மூன்றும் ஒரு பொருளைத்தரும். ஒளவைக்குறள் வாயு வழக்க மறிந்து செறிந்தடைங்கில் ஆயுட்பெருக்க முண்டாம் வாயுவி லைய உடம்பின் பயனே ஆயுவி னெல்லை யது.