பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4-4 க. அயோத்திதாளலப் பண்டிதர் பெளத்த வரசர்களும், பெளத்த வு பாசகர்களும் வியாரமென்னும் மடங்களைக் கட்டுவித்து மகத நாட்டிற்கும், கபிலை நகருக்கும் அரசரான சித்தார்த்தர் போதன வுருவம் போலும், ஞானசாதன வுருவம் போலும் பரிநிருவானத்திற்குப் பின்னரமைந்த யோகசயன வுருவம்போலு மமைத்து சுத்த சாதுக்களாம் சமணமுநிவர்களை வீற்றிருக்கச் செய்து அவர்களது கலே நூல் விருத்திகளுக்கும், ஞானசாதன விருத்திகளுக்கும் யாதொரு குறைவும் நேரிடாது பகவன் போதித்தவண்ணம் சாதித்துக் கடைத்தேறு மாறு வேண பொன்னுதவியும் பொருளுதவியுஞ் செய்துவந்தார்கள். இவ்வகையாக வோர் சமணமுநிவரை சாது சங்கத்திற் சேர்த்து அவர் முத்தநிலை பெறும்வரை வேண வுதவிபுரிந்து வருவோர் புருஷர்களாயின் அவர்களை ஞானத் தந்தையர்களென்றும், இஸ்திரீகளாயின் அவர்களை ஞானத் தாயார்களென்றும் வழங்கி வந்தார்கள். அங்ங்னம் மடங்களாங் கோவில்களிற் றங்கி ஞான சாதனஞ் செய்யும் சமண முநிவர்களுக்கு ஞான தந்தை, ஞானத்தாயென்போர் ஏன் உதவி புரியவேண்டு மென்பீரேல், ஞான சாதகர்களுக்கு யாதொரு குறைவுங் கவலையுமின்றி உதவி புரிவதால் அவர்களெடுக்கும் ஞானசாதன முயற்சிக்கு யாதோ ரிடுக்கமுமின்றி யீடேற்ற மடைவார்கள். அத்தகைய யீடேற்றமாம் விவேக விருத்திப்பெற்ருேர் ஒருவ ரத்தேசத்தி லுளரேல் அத்தேசத்திலுள்ள சகல குடிகளும் சுகவாழ்க்கைப் பெருவார்கள் அவர்களது ஞான சாதனத்தால் இராகத்துவேஷ மோகங்களை யகற்றி தண்மெயாம் சாந்தநிலை பெற்று அந்தணர்க ளானபடியால் அவர்கள் பார்வை பெற்ருேரும், அவர்களே தெரிசித்து வொடுக்கம் பெற்ருேரும் துக்கநிவர்த்திக் கேதுவாய் பலன்களைப் பெறுகுவதுடன் நீதிநூல், ஞானநூல், கணிதநூல், வைத்திய நூல், இலக்கிய நூல், இலக்கண நூல்களையும் ஏற்படுத்தி மக்கள் சீர்திருத்தத்திற்காய நன்மார்க்கங் களை யூட்டிவருகின்றபடியால் தேசத்தில் ஞானசாதனர்கள் பெருகி அவர்களால் மக்கள் சீர்திருத்த மடைதல் வேண்டு மென்னும், அன்பின் மிகுதியால் அவர்களுக்கு வேண்டிய வுதவிபுரிந்து வருவது வழக்கமாயிருந்தது.