பக்கம்:சகல கலாவல்லி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፵8 சகல கலாஇல்கி

மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் கலைமகளின் நுண்ணிய வடிவு. நடை கற்கும் தோற்றம் புறவடிவு. இரண்டையும் ஒருங்கே கண்டு வழிபடுகிறர் குமரகுருபரர்.

சொற்கும் பொருட்கும் உயிராம்மெய்ஞ்

ஞானத்தின் தோற்றம்என்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர்

யார்? நிலம் தோய்புழைக்கை தற்குஞ் சரத்தின் பிடியோடு அரசன்னம் நானநடை கற்கும் பதாம்புயத் தாயே,

சகல கலாவல்லியே..!

[நினைப்பவர் யார் : அரியர் என்ற படி; புழைக்கைதுவாரம் உள்ள கை, துதிக்கை. பதாம் புயத்தானே' என்பதும் ஒரு பாடம்.) -

இது சகல கலாவல்லி மாலேயில் வரும் ஒன்பதாவது பாட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/85&oldid=557916" இலிருந்து மீள்விக்கப்பட்டது