பக்கம்:சகுந்தலா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 13 குறைத்துக் கொண்டான். எப்பொழுதாவது தோட்டத் திற்குப் போய் கொஞ்ச நேரம் கின்று கவனித்து விட்டுத் திரும்பி விடுவான். சாயங்கால வேளைகளிலும் நிலவு காலத்திலும் முன் வாசலில் ஈஸிசேரையோ, கட்டிலேயோ போட்டு சுகமாகச் சாய்ந்து காலக்கொலே செய்வதை வழக்கமாக வளர்த்திருங் தான் அவன். அடுத்த வீட்டில் குடியேறியிருக்கும் பெண்அல்லது, பெண்கள் தானே -தன்சீனப் பற்றித் தவருக எண்ணிவிட இடமேற்படலாம் என்ற அர்த்தமற்ற அநாவசி யக் கவலே பிறந்தது அவனுக்கு. அதனால் அந்த வழக்கத்தை யும் அவன் கைவிட்டிருந்தான். நாளாக ஆக நாம் இப்படித் தயங்கி நடந்து கொள்ள வேண்டிய தேவையேயில்லே. அடுத்த வீட்டில் ஆள் இருப் பதும் ஒன்றுதான், இல்லாத நிலையும் ஒன்றேதான். அவ் விதம்தான் தோன்றுகிறது. நமது போக்கினுல் மற்றவர் களுக்கு எத்தகைய இடைஞ்சலும் ஏற்பட்டுவிடும் என்று நான் கினேக்கவில்லே ' என அவன் அ ங் த ர த் மா உபதேசித்தது. அவன் அந்த முடிவுக்கு வந்த அதே தினத்தில் அடுத்த விட்டுக்காரியும் அவ்விதமான ஒரு தீர்மானத்திற்கு வந்திருங் தாள் என்பது பிறகு தான் புரிந்தது. அவனது செயலுக்கும் மீறி நடந்துவிட்ட நிகழ்ச்சி அவனுக்கு வருத்தமே அளித்தது. " நாம் ஏன் நமது முதல் தீர்மானத்திற்கு ஒரு திருத்தம் கொண்டு வந்து அதை அனுஷ்டித்தோம் ' என்ற மனக் கஷ்டம் ஏற்பட்டு விட்டது அவனுக்கு. நடந்தது இது தான் மத்தியானம் இரண்டு மணி யிருக்கும். வெயில் கடுமை யாக"யிருந்தது. சூழ்நிலை எங்கும் ஒரே அமைதி. எல் லோரும் எல்லாமும் உஷ்ணத்தினுல் கிரங்கி ஒடுங்கிக் கிடந்த தாகவே தோன்றியது. பெயருக்குக் கூட ஒரு இலேயாவது ஆடி அசங்க வில்லேயே, ஒரே புழுக்கமாக யிருக்கிறது’ என்று பலரையும் முனங்க வைத்த நேரம். சகுராமனுக்கு அறையினுள் அடைத்துக் கிடப்பது கஷ்டமாக யிருந்தது. தோட்டத்தில் வேப்ப மரத்தடியில் போய் தங்கி யிருந்தால் சுகமாக யிருக்கும் என்று கின்த் தான். பிரம்பு நாற்காலியையும் ஒரு புத்தகத்தையும் துரக்கிக் கொண்டு புறப்பட்டான். வீட்டின் பின்புறத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/15&oldid=814740" இலிருந்து மீள்விக்கப்பட்டது