பக்கம்:சகுந்தலா.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 - சகுந்தலா கிடக்கப் போகிருய்? பட்டினி கிடந்து சாகப்போகிருயா? என்ருன் ரகு. அதற்கும் அவள் பதில் சொல்லவில்லே. சகுராமனுக்கு எரிச்சலாக இருந்தது; அனுதாபமும் மிஞ்சியது. இந்தா பாரு சகுந்தலா, இன்னும் இது மாதிரியே கிடந்தால் நான்ே உன்னேப் பிடித்துத் துரக்கி உட்கார வைப்பேன். ஆமாம். எவ்வளவு நேரம்தான் உனக்காகப் பிராணனே விடுவது!’ என்ருன். - அவன் சொல்லியபடியே செய்வான் என்று அவன் குரலே அறிவித்ததோ என்னவோ. அவள் எழுந்து உட்கார்ந்தாள். கூந்தல் அவிழ்ந்து புரள, அழுது அழுது விங்கிய முகத்தை முழங்கால் மீது படிய வைத்து முட்டைக் கட்டிக்கொண்டு இருந்தாள். நான் எக்கேடும் கெடுகிறேன். அவரைப் போல நீங்களும் கதவைச் சாத்திவிட்டுப் போவது தானே! ஏன் தொல்லே கொடுக்கிறீர்கள்?’ என்ருள் மிக மெலிந்த குரலில். - அவன் கொடுத்த தொல்லே அவள் மனதுக்குப் பிடித் திருந்தது. எனினும் சொல்லுக்காகச் சும்மா சொல்லி வைத்தாள் அப்படி: ‘நான் இன்னும் மனிதத் தன்மை இழந்து விடவில்லையே சகுந்தலா!' என்று பரிவுடன் பேசின்ை ரகு. அவள் அவனேப் பார்த்தாள். அவன் முகத்தை, கண் களே கோக்கினுள். அவள் பார்வை அவன் கைக் கட்டிலே தேங்கி கின்றது ஒரு கணம். அது என்ன கட்டு? எனருள. - அவன் சிரித்தீான். 'உன் பல் பலத்தைக் காட்டினயே அதன் விளேவு' என்ருன்: அவள் இதழ்களிலும் சிறு சிரிப்பு தவழ்ந்தது. வேதனே உள்ளத்தின் உணர்ச்சி ரேகை அது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/170&oldid=814763" இலிருந்து மீள்விக்கப்பட்டது