பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சங்ககாலச் சான்ருேர்கள்

பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே’ (புறம். 121) என்ற அருந்தமிழ்க் கவிதையை அவன் மனத்தில் தைக் கும் வண்ணம் அஞ்சாது கூறினர்.

புலவர் கருத்தறிய மலேயமான் பெரிதும் விழைக் தான். அஃதறிந்து ஆராமகிழ்வு கொண்டு, அருந்தமிழ்ப் புலவரும் பெருமை சான்ற வேள் பாரியின் மகளிரை வதுவை புரிய உதவ வேண்டும் என்ற தம் விருப் பண்தைக் கூறி, அதுவே தாம் விழையும் பரிசில் எனவும் இயம்பினும். புலவரின் கருனேயுள்ளத்தையும், கருவி வானம் போல வரையாது இரவலர்க்குச் சுரந்த வள்ளி யோன் மக்கட்குத் தான் ஆற்ற வேண்டிய கடமையையும் எண்ணிப்பார்த்தான் காரி. அவன் உள்ளத்தில் ஒர் அழகோவியம் எழுந்தது. மாவண் பாரியின் மகளிரும் தன் மக்களும் வதுவைக் கோலத்தில் வீற்றிருக்கும் திருக்காட்சி அவன் உள்ளக் கிழியில் உயிரோவியமாய் உருப்பெற்றிருத்தல் கண்டான். தீந்தமிழின் இன்பம் போன்றதொரு பேரின்பம் அவன் உடலெல்லாம் பாய் வதை உணர்ந்தான் ; உள்ளத்து எழுந்த இவ்வெண் னமே வாழ்வாக-கனவாக-மலராதோ!' என்று ஏங்கினுன்; தன் அருமை மக்களின் மனம் அறிய முயன்று ன்; தான் பெற்ற செல்வர்கள்-அறிவும் ஆண்மையும் அருளும் ஒருங்கே பெற்ற காளேயர்-கருத்தும் எவ்வாறே தம் மனம் போலவே இருக்கக்கண்டான். பருவ மழை கண்ட பயிர் போல அவன் உள்ளம் பூரித்தது. நெடுமாப் பாரியின் மகளிர் என் மருகியர் ' என்ற கினேவு அவன் சிங்தையெல் லாம் தேனுகச் செய்தது. அளவிலா மகிழ்வு கொண் டான் அத்தேர்வண் தோன்றல். பறம்பின் கோமான் செல்வியரை அடைய மலையமான் குடி செய்த மாதவம் என்னேயோ !” என இறும்பூது கொண்டு, இருந்தமிழ்ப் புலவர் கோனிடம் தன் கருத்தையும் இசைவையும் கூறி,