பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சங்ககாலச் சான்ருேர்கள்

லோவியமாக்கிக் காட்டினர்; தம் இல்லத்தில் அடுதலே மறந்து நெடுநாளாக அடுப்பில் ஆம்பி பூத்திருக்கும் அவலத்தை-வாட்டும் பசிய ல் வதையுறும் தம் மனேவியாரின் பாலற்ற மார்பினே வறிதே சுவைத் துச் சுவைத்து வாய் விட்டுக் கதறும் பச்சிளங்குழந்தை படும் வேதனேயை-அது கண்டு ஆவி சோர்ந்து அழுது கிற்கும் தம் மனேவியாரின் துன்பத்தை-துயரத்தை யெல்லாம் கேட்டார் கண்கள் நீர் சிந்தும் வண்ணம் நவின்ருர் புலவர். இன்மை தீர்க்கும் குடிப்பிறந்த அவ் வேந்தன், புலவரின் துயர் கிறைந்த மொழிகள் கேட்டு இதயம் உருகினன்; சான்ருேளின் தமிழகத்துக்கு நேர்ந்த் நிலை கினேந்து கண் கலங்கினன். தன் காடுறை வாழ் வினும் கோடி மடங்கு இன்னுததாய் விளங்கியது புல வரின் வாழ்வு அவனுக்கு பொன்னும் மணியும் வாரி இசைத்த தன் வண்மை கிறைந்த கைகள் பயனற்றுக் கிடக்கும் கிலே கண்டு அவன் மனம் கொந்தான் ; நாடி வந்தவர்க்கெல்லாம் நறுஞ்சோலேயாய்ப் ப ய ன் ப ட் ட தன் வாழ்க்கை, யாருக்கும் உதவாத கொடும்பாலையாகி விட்டதே என மனம் குமுறின்ை. இங்கிலேயில் அண்மை யிலே அவன் கேட்டிருந்த செய்தி அவன் அகச் செவிகளில் முழங்கியது. அவன் முறுவல் பூத்தான்; பெருமகிழ்வு கொண்டான்; ‘சாவினும் துன்பம் கிறைந் தது வேறில்லை ; ஆல்ை, காடி வந்த கல்லோர்க்கு ஈய முடியாத நிலையில் அச்சாவினும் இனியது வேறெதுவு மில்லை, என்று சான்ருேச் சாற்றிய மணி மொழியை கினேந்தான்; வாழ்வில் என்றும் கண்டிராத இன்ப உணர்ச்சி அவன் உடலே-உள்ளத்தை-உயிரை ஆட் கொண்டது.

சாதலின் இன்னுதது இல்லை; இனி(து) அது உம்

ஈதல் இயையஐக் கடை." (குறள், 350)