பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

சங்ககாலத் தமிழ் மக்கள்

மொழி அக்காலத் தமிழ் வேந்தர்களது செயற்கரிய செய்யுந்திறனை நன்கு தெளிவிப்பதாகும்.

இவ்வாறே இமயவரம்பன் நெடுஞ்சேரலா தனது போர்த் திறத்தை உணர்ந்து மகிழ்ந்த குமட்டூர்க் கண்ணனார் என்னும் புலவர்,

"கூற்றுவெகுண்டு வரினும் மாற்றும்ஆற் றலையே.”

என அவ்வேந்தர் பெருமானை வியந்து போற்றுகின்றார்.

"நட்டவர் குடியுயர்க்குவை;
 செற்றவர் அரசு பெயர்க்குவை."

எனத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழிய னை மாங்குடி மருதனார் பாராட்டிப் போற்றுகின்றார்.

இங்ஙனம் பேராற்றல் பெற்ற தமிழ் வேந்தர்கள், போர்க்களத்தின்கண்ணே படை வீரர்களுக்குக் கவசம் போலப் பகைவர் சேனையை எதிர்த்து நிற்கும் இயல்புடையவர்களாய் இருந்தார்கள். அதனால், அவர்களைச் 'சான்றோர் மெய்ம்மறை' (வீரர்க்குக் கவசம்) எனப் புலவர் பெருமக்கள் புகழ்ந்து போற்றினார்கள் [1] ."


பகைவேந்தர் ஆட்சியுட்பட்டுக் கலங்கித் தளர்ந்து கெட்ட குடிகளை அச்சமின்றிப் போர் புரியும் வீரர்களாகப் பழக்கி உரிமையுடன் வெற்றி பெற உதவி செய்யுந் திறம் தமிழ் வேந்தர் கொண்டொழுகிய நாகரிக நிலையாகும். இம்முறையாற் பெறும் அரசியல் வெற்றியைத்


  1. 'கோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை';

        -பதிற். 14.

    'ஏக்தெழி லாகத்துச் சான்ருேர் மெய்ம்மறை';

      -பதிற். 58.