பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய சன்மாறன் 29

உணர உணர்த்தினால்லர்; அவருள் நக்கீரர், கன்மாறன் சினத்தால் சிவனேயும், வலியால் பலராமனேயும், புகழால் திருமாலையும், முன்னியது முடித்தலால் முருகனேயும் ஒத் துளான் என, அவன் ஆற்றல் சிறப்பை ஒரளவு எடுத் துக் கூறிப் போற்றியுள்ளார்; காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனர், " அரசே! போருடற்றிப் பகைவர் நாட் டைக் கைப்பற்றும் காலக்கே, கின் வீரர், அங்காட்டுக் கழனி களிற் புகுந்து, ஆங்கு ஆற்ற விளக்தி, முற்றி வளைந்து கிடக்கும் நெற் பயிர்களைக் கொள்ளையிட வேண்டின், அவ் வாறே கொள்ளையிடுக அவர் நாட்டகத்து ஊர்களைத் தீயிட்டுச் சுடவேண்டின், அவ்வாறே சுடுக ! நின் கைவேல், அப் பகைவரை அழிக்க வேண்டின், அவ்வாறே அழிக்கட் டும் ஆனல், அப் பகைவர் நாட்டுக் காவற்காடுகளை மட்டும் அழிக்கக் கருதற்க ; அக் காவற்காடுகளில் வளர்ந்துள மரங்களை வெட்டிப் பெறும் கட்டுத்தறிகள், கின் யானே களைப் பிணிக்கும் அத்துணை வன்மையுடையன அல்ல,” என அவன் போாற்றல் புலப்படப் பாடியுள்ளார்:

நீயே, பிறர்நாடு கொள்ளுங் காலை, அவர் நாட்டு இறங்கு கதிர்க் கழனி, கின் இளையரும் கவர்க! நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க ! மின்னுரிமிர்க் தன்னரின் ஒளிறிலங்கு நெடுவேல் ஒன்னர்ச் செகுப்பினும் செகுக்க என்னதாஉம் கடிமாம் தடிதல் ஒம்பு ! கின் நெடுகல் யானைக் கந்து ஆற்ருவே.’ (புறம் : இஎ) நன்மாறன் காலத்தே நாடாண்டிருந்த, சோ, பாண்டிய அரசர்களினும் இவனே சிறந்தவனுவன்; தமிழ் வேந்தர் மூவருள், நன்மாறன், நனிமிகச் சிறந்தோணுதலின், அவன், சிவனுக்குரிய கண்கள் மூன்றினும், எல்லோராலும் போற் றப்படும் நெற்றிக்கண் போல்வன் எனப் பாராட்டுகிருர், மதுரை மருதன் இளநாகனர் :

' கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்

பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல வேந்து மேம்பட்ட பூந்தார் மாற!” (புறம்: இடு}