பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. கோசர் ' என் ஆட்சிக்கு அடிபணியாது என் அரசோ டொப்ப அரசோச்சிய பெருமை வாய்ந்த பேரரசுகள் ” என மெளரியப் பேராசன் அசோகனல் சிறப்பித்துக் கூறப்பெற்ற கென்னிந்திய அரச இனங்கள் நான்கனுள் சத்யபுத்ரர் இனமும் ஒன்று; இச் சத்யபுத்ரரே கோசராவர் என வரலாற்று நூலாசிரியர் பலரும் கருதுவர் ; நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயாகின்று” (குறுங் : கடு) எனவும், வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல்லிசை வளங்கெழு கோசர்” (அகம் : உoடு) எனவும், கோசர், வாய்மொழி வழுவாதவர் எனச் சங்க நூல்களில் அறிவிக் கப்பட்டுள்ளமையால் போலும், அவர்கள் சத்யபுத்ார் என அழைக்கப் படலாயினர். . கோசர்க்குரிய நாடு, துளுநாடு என்று பழந்தமிழ் இலக்கியம் பகருகிறது. மங்களுரை நடுவிடமாக் கொண்ட, துளுமொழி வழங்கும் நாடே துளுநாடாம் என்றும், கேரளாாட்டிற்கும், துளுநாட்டிற்கும் எல்லையாகச் சந்திர கிரி அமைந்துளது என்றும், அந்நாடே அசோகனல் சத்ய புத்ார் என அழைக்கப்பெற்ற கோசர் நாடாம் என்றும் வரலாற்று நூலாசிரியர் பலரும் கூறுவர். கோசர், 'கொங் கிளங் கோசர்' (சிலம்பு : உரைபெறு கட்டுரை) என்றும் அழைக்கப் பெறுவதால், கோசர் ஆட்சி, கொங்கர் நாட்டி லும் பரவியிருந்தது எனத் தெரிகிறது. - ' மெய்ம்மலி பெரும்பூண் செம்மற் கோசர் கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த பாக லார்கைப் பறைக் கண் பீலித் . . . . . தோகைக் காவின் துளுநாடு.” (அகம் : சடு) துளுநாட்டைத் தாயகமாக் கொண்டு வாழ்ந்த கோசர், காலம் செல்லச் செல்லத், தாயகத்தின் நீங்கிக் கிழக்கு நோக்கிச்சென் று வாழலாயினர் என்பதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன;