பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 திரையன் தெருக்களையும், மலைபோலும் மாடங்களையும், காதலர் இனிது உறைந்து இன்பம் நுகர்தற்காம் இளமரச் சோலை களையும், ஊரினின்றும் பெயர்ந்து பிறநாடு போதலை உள் ளத்தான் உள்ளியும் அறியாப் பழங்குடிகளையும் கடல் ஒலி போலவும், கார்மேகத் தொலிபோலவும் எழும் பல்வேறு ஒலிகளையும் பெற்றுப் பெருநகராய்த் திகழ்ந்தது. 'இரைதேர்ந்திவரும் கொடுத்தாள் முதலேயொடு திரைபடக் குழிந்த கல்லகழ் கிடங்கின் வரைபுரை நிவப்பின் வான்தோய் இஞ்சி உரைசெல வெறுத்த அவன்மூதார்’ (மலைபடு: க0-கங்) ‘நிதியம் துஞ்சும் நிவந்தோங்கு வரைப்பிற் பதியெழல் அறியாப் பழங்குடி கெழீஇ வியலிடம் பெருஅ விழுப்பெரு நியமத்து யாறெனக் கிடந்த தெருவின், சாறென. இகழுநர் வெரூஉம் கவலை மறுகின், கடல் எனக் கார் என ஒலிக்கும் சம்மையொடு மலேயென, மழையென மாடம் ஓங்கித் துனிதீர் காதலின் இனிதமர்க் துறையும் பணிவார் காவிற் பல்வண் டிமிரும் • * * * * * அவன் பழவிறல் மூதார்’ (மலைபடு: சஎஅ-அஎ) நன்னனுக்குரிய நாடும், ஊரும், ஆறும், பிறவும் நல்லன ஆதலைப் போன்றே, அவன் நாட்டு வாழ்மக்களும் நனிமிக நல்லவராவர்; காட்டு மக்கள் கொடியராவர் என்றே எவரும் எண்ணியிருப்பர்; எங்கும் அவர் அவ்வாறே யுள் ளனர்; ஆனல், நன்னன் நாட்டைச் சேர்ந்த காட்டு வாழ் மக்கள் அத்தன்மையால்லர்; அவர்கள் அவ்வழியே வரும் புதியோர்க்கு ஊற ஒன்றும் விளக்காது, அன்னர், அவ் விடங்களை இனிதே கழியுமாறு இனிய துணைவராவர்; தம் குடியில் தங்கிய வழிச்செல்வார்க்கும் அவரோடு உடன் வந்தார் அனைவர்க்கும் தேனும், கிழங்கும் தெவிட்டா ஊனும் தவரு.துதங்து அனுப்புவர்; அத்துணை அருள் உள் ளம் உடையார் அவர்: - -