பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜின்காவும் தங்கமணியின் கட்டிலில் படுத்துக் கொண்டு உறங்கலாயிற்று. இரவில் ஏதோ பட்டி நாய் குரைக்கும் சப்தம் உண்டாயிற்று. அவை யெல்லாம் அவர்கள் காதில் விழவே இல்லை. எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்கும் ஜின்காவும் நன்றாக நித்திரையில் ஆழ்ந்து விட்டது. அத்தனை அலுப்பு அதற்கு.


[12]

பெட்டி காணவில்லை!

அதிகாலையில் தங்கமணி திடீரென்று விழித்துக் கொண்டான். விழித்ததும் முதல் வேலையாக அந்தப் பெட்டியிருக்குமிடத்திற்குப் போனான். ஆனால், என்ன அதிசயம்! அந்தப் பெட்டியை அங்கே காணவில்லை. அதனுள் போட்டு வைத்திருந்த வரைபடமும் இல்லை.

அவன் திடுக்கிட்டான். இது யார் வேலையாக இருக்கும் என்று யோசித்தான். உடனே வண்டிக்காரன் இருக்குமிடத்திற்குப் போனான். அங்கே வண்டிக்காரன் இல்லை. “எங்கேயோ இரவோடு இரவாகப் போய் வருவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான்” என்று அங்கிருந்த மற்ற பண்ணை ஆட்கள் தெரிவித்தார்கள்.

தங்கமணிக்கு சந்தேகம் வந்துவிட்டது. வண்டிக்காரன் புதிய ஆள். அவர்கள் உற்சாகத்தினால் சத்தமாகப் பேசியதை நினைத்து வருந்தினான். அவன் இருட்டிலே மறைவாக வந்து அவர்கள் பேசியதைக் கேட்டிருக்க வேண்டும். அத்துடன் அவன் புதையலைக் கண்டு பிடிக்க வந்த ஆளாகத்தான் இருக்க வேண்டும். அவனுடன் இன்னும் சிலரும் கூட்டுச் சேர்ந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கண்ணுப்பாட்டி தனியாக இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு

38