பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 அகுதை

வேளிரொடு பொரீஇய கழித்த வாய்வாள் அன்ன வறுஞ்சுரம்." (அகம்: உங்க)

இம்மூவரே யல்லாமல், பகைவர்தம் பேராண்மையைத் தன் வில்லாண்மையாலும், அவர் தம் யானைப் படையைத் தன் வேற்படையாலும் அழிக்க வல்லவனும், பொன் குலாய பெரிய தேர் பல உடையவனும், பொதியிலே ஆண் டிருந்தோனுமாய திதியன் ஒருவனும், பாண்டியன் நெடுஞ் செழியனே, அவன் பகைவரோடு சேர்ந்துகொண்டு, தலேயா லங் கானத்தே எதிர்த்துப் போரிட்டு அழிந்த திதியன் ஒருவனும் உள்ளனன். இவருள், பொதியிற் றிதியன் வர லாற்றினப் பரணரும், ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனும், நெடுஞ்செழியன் பகைவனுய திதியன் வரலாற்றினே நக் கீரரும் உரைத்துள்ளனர். 'பொருநர், செல்சமம் கடந்த வில்கெழு தடக்கைப் பொதியிற் செல்வன், பொலந்தேர்த் திதியன்' 'களிறுகண் கூடிய வாள்மயங்கு ஞாட்பின் ஒளிறு வேல்தானேக் கடுந்தேர்த் திதியன்' புகலரும் பொதியில்' 'கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன், ஆலங் கானத்து அகன்றலே சிவப்பச் சேரல், செம்பியன், சினங்கெழு திதியன். போர்வல் யானைப் பொலம்பூண் எழினி, காரரி 5றவின் எருமை யூரன் தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மான், இயல்தேர்ப் பொருகன் என்று எழுவர் கல்வலம் அடங்க. (அகம்: உடு, -உஉ; டசு) அன்னிமிஞிலியின் துயர் போக்கக் கோசரைக் கொன்ற அழுந்தைத் திதியன் வரலாறு உரைக்கும் பாணரே, பொதியில் திதியன் வரலாற்றினையும் கூறுதலா னும், கோசரைக் கொன்ற அழுந்தைத் திதியனைச் செரு வியல் நன்மான் திதியன்" (அகம்: உசுஉ), கடுந்தேர்த்