பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 அகுதை ஆற்றல் உடையயை அகுதை, அதைத் தன் படைவலி கொண்டே செய்திருப்பன், இத்தகு சூழ்ச்சிநெறி சென் றிருப்பானல்லன்; அவ்வாறு செல்லற்கு, ஆற்றற்குறை யுடையானல்லன் அவன். மேலும் மடப்பிடிப் பரிசில் பிறிதொன்று குறித்தது எனக் கூறும் குறுக்தொகைச் செய்யுட்கண் (உகஅ) "இன்கடுங் கள்ளின் அகுதை பின்றை” என்ற பாடந்தான் ஏடுகள் பலவற்றினும் உளதேயல்லால், "இன்கடுங் கள்ளின் அகுதை தந்த" என்ற பாடம் இல்லே என்பதையும் நோக்கியவழி, மடப்பிடிப் பரிசில் பிறி தொன்று குறித்த நிகழ்ச்சி யாதாயினும், அது, அகுதை இறந்தபிறகு கிகழ்ந்த நிகழ்ச்சியேயல்லால், அஃது அவன்.' எண்ணிச் செய்த நிகழ்ச்சியாகாது என்பதும் புலளும். ஆக, இவற்றையெல்லாம் ஒருங்குவைத்து ஊன்றி நோக்கு. வார்க்கு அகுதை, கோசர் இனத்தவனல்லன் என்பதும், கன்னன் நறுமா குறித்துக் கூறுவது யாரோ சிலர் கட்டி விட்ட கதையேயல்லாமல், வரலாற்றுண்மை யுடையதன்று: அகுதைக்கு, அவன் மர்மர அழிவில் யாதொரு தொடர்பும்,

இல்லை என்பதும் உறுதியாதல் உணர்க. s'