பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கி. இருங்கோவேள் சிற்றரையம் பேரரையம் என்ற இருபெரும் பகுதி களேக்கொண்ட அரையம் என்ற பேரூரில் இருந்து அர சாண்ட வேளிர் தலைவன் இருங்கோவேள் அவன் நாடும், ஊரும், காடும், மலேயும், மணியும், பொன்னும்மண்டிக் கிடக்கும் மாண்புடையன ஒடும் கடமாவின் கால் கிளர, மணியும், பொன்னும் சிதறிவிழும் சிறப்புடையது அவன் மலேயகத்துச் சாரல் இருங்கோவேள், பகைவர் அஞ்சத் தக்க பெரும் படையும் பெற்றிருந்தான். "பொன்படு மால்வரைக் கிழவ! வென்வேல் உடலுநர் உட்கும் தானேக் கெடலருங் குரைய நாடுகிழ வோயே!” 'கடமா கல்லேறு - கடறு மணிகிளரச் சிதறுபொன் மிளிரக் கடிய கதழும் கெடுவரைப் படப்பை வென்றி கிலேஇய விழுப்புகழ் ஒன்றி இருபாற் பெயரிய உருகெழு மூதுார்க் கோடிபல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய tடுகிலே அரையம்.’’ (புறம்: உ0க, 202) இருங்கோவேள், வடநாட்டில் ஒரு முனிவன் செய்த வேள்வியில் தோன்றி அகத்தியனுர் தமிழ்நாடு போந்த காலே, அவர் அழைக்க, அவருடன் வந்த பதினெண்வகை வேளிருள் ஒருவனும், துவாரபதி எனவும், துவார சமுத் திரம் எனவும் பெயருடையதாய், மைசூருக்கு வடமேற்கே ஐம்பது கல் தொலைவில் உள்ள துவரையில் இருந்து அர சாண்டோனுமாய வேளிர் வழிவந்தான் ஒருவன் மரபில், காற்பத்தொன்பதாம் தலேமுறையில் பிறந்தவனுவன் : "நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச் செம்புபுனேங் தியற்றிய சேண்ருெடும் புரிசை