பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*7(} அகுதை காட்டு வளம், அவர் உள்ளத்தே ஆசைக்கனலே மூட்டிற்று: எவ்வி, அரசாண்டிருந்த காலத்தே, பாண்டிநாட்டு அரி யணையில், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் விற்றிருந்தான். இயல்பாகவே போர் வெறி கொண்டவன் அவன் எவ்வியின் புகழையும், மிழலை வளத்தையும் அறிந்த அவன், எவ்வியை அழித்து, மிழலே யைக் கைப்பற்றத் துணிந்தான். இளமையிலேயே ஏழர சரை வென்ற வீறுடையாயை பாண்டியன் படையை அழிக்கும் ஆற்றல், எவ்வி படைக்கு இல்லாது போயிற்று. எவ்வியும் இறந்தான்; அவன் மிழலையும் பாண்டியன் கிைடபட்டது. - "யாழிசை மறுகின் டுேர் கிழவோன் வாய்வாள் எவ்வி ஏவல் மேவார் நெடுமிடல் சாய்த்த பசும்பூட் பொருங்தலர்." (அகம் : உசு-சுர் "ஒம்பா ஈகை மாவேள் எவ்வி புனலம் புதவின் மிழலையொடு...... குப்பை கெல்லின் முத்துாறு தந்த கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய!” (புறம்: உச} எவ்வி இறந்தான் என்பதைக் கேட்டனர் பாணர். தம்மைப் புரந்த பெருவள்ளல் இறந்தானகவே, தம் இன்ப வாழ்வு அழிந்தது எனக் கொண்டனர்; தம் தலையில் மலர்சூடி வாழும் மகிழ்ச்சியை மறந்தனர்; தம்மைப் புரப்போன் இறந்தானகவே, தம் பாடல் தொழில் இனிப் பயனுருது என்பதை உணர்ந்த அப் பாணர், தம் கையாழால் இனிப் பயன் இல்லை எனக் கொண்டனர்; பயனற்ற யாழைக் கைக்கொண்டிருப்பதினும், அதை அழித்துவிடுவதே அறிவுடைமையாம் என எண்ணினர்: உடனே அதை ஒன்றிரண்டாக ஒடித்துப்போட்டுப் புலம் அபிச் சென்றனர். - - -