பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூசு. கொண்கானங் கிழான் மைசூர்நாட்டின் தென்பகுதியையும், சேலம், கோவை மாவட்டங்களையும் கொண்டநாடு, பண்டு கொண்கானம் என்ற பெயருடையதொரு நாடாய்த் திகழ்ந்தது : கொண்கானம், பின்னர்க் கொங்கணம் என மருவி வழங்க லாயிற்று கொண்காணம் எனும் பெயருடையதொரு மலேயைத் தன்னகத்தே பெற்றிருந்தமையால், அந்நாடு அப் பெயர் பெற்றது; கொண்கானம், பொன்னுடைமை பான் பொலிவுற்றது எனப் போற்றுவர் புலவர்; 'பொன் படு கொண்கானம்' (நற்:கூகக) எனப் பாலேபாடிய பெருங்கடுங்கோவும், விண்ணேத் தொடும் கொடுமுடிகளே யும், பொன்படு பாறைகளையும் உடையது எனும் பொருள் தோன்ற, 'விண்பொரு நெடுவரைக் கவாஅன் பொன்படு மருங்கின் மலே' (அகம்: க.எங்) என முள்ளியூர்ப்பூதி யாரும் பாராட்டுதல் உணர்க. பொன் அளிக்கும் பெருமை மிக்க கொண்கானம், இயற்கை வளத்தினும் எழில் பெற்றுத் திகழ்ந்தது; தூய வெள்ளாடையை விரித்து வைத்தாற்போல் வீழ்ந்தோடும் அருவிகளே யுடையது கொண்கானம் என, அதன் இயற்கையழகினே இனி தெடுத்துப் பாராட்டுவர் புலவர். - 'அறுவைத் துர விரி கடுப்பத் துவன்றி மீமிசைத் கண் பல இழிதரும் அருவிகின் கொண்பெருங் கானம்.' (புறம்: கடுச} இக்கொண்கான நாட்டில், கொடையும், கொற்றமும் உடையானுெரு தலைவன் இருந்தான்; அவனேக் கொண் காணங்கிழான் என்றே மக்கள் அழைத்தனர்; அவன் வண்மையும், ஆண்மையும் விளங்க, புலவர் மோசிகீரனர் பாடிய பாககள பலவாம. - . 'உலகில் எத்தனையோ அரசர்கள் உள்ளனர்; அவர் கட்கு உரிமையாக எத்தனேயோ மலைகளும் உள்ளன; அம்