பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

க. அதியன் விண்ணத்தனார்

அதியமான் நெடுமானஞ்சி பிறந்த குடி, அதியர் குடி எனப்படும்; அவ் வதியர் குடி, சேர இனத்தோடு தொடர்புடையதாம் என்றும் கருதுவர்; ஆகவே, இவ்வதியன் விண்ணத்தனார், சேரர் வழிவந்தவராவர் எனக் கோடல் பொருந்தும். அள்ளன் என்பானைத் தன் படைத்துணைவனாகக் கொண்டு, அவனால் நாடு பலகொண்டு, அம்மகிழ்ச்சி யால், அவனுக்கும் நாடு சில நல்கிய அதியனையும், அவனுக் குப் பிறகு பாடுவார் பறையொலி அடங்கிற்று என அவன் கொடையினையும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார் மாமூலனார். “ஆடு நடைப் பொலிந்த புகற்சியின் நாடுகோள், அள்ளனைப் பணித்த அதியன் பின்றை, வள்ளுயிர் மாக்கிணை கண்ண விந் தாங்கு” (அகம் : 325). கூத்தாடுவாரும் அவர் சுற்றமும் ஆடி மகிழ்ந்த இடத்தை, அவர் அவ்விடத்தை விட்டு அகன்றபின்னர்க்காணல் பெரிதும் துயர் தருவதாம் என்று கூறுகிறார் நம் புலவர் அதியன் விண்ண த்தனாரும், “இரும் பேரொக்கல் கோடியர் இறந்த புன்தலை மன்றம் காணின் வழிநாள், அழுங்கல் மூதூர்க்கு இன்னாதாகும்.” இதனால், புலவர் அதியன் விண்ணத்தனார், மாமூலனார் பாராட்டிய, அதியன் தாமோ என எண்ணற்கு இடமுண்டாதல் காண்க.

கூத்தாடுவார், கூத்தாடிப் பெற்ற பரிசிற் பொருளைத் தாமே உண்ணுதல்வேண்டும் என எண்ணாராய், எல்லோர்க்கும் உதவி வாழும் உயர்பெரு வாழ்வுடையவர்; அவர் தம் அவ் வாழ்விற்கு இடையூறு என்றும் உண்டாதல் இல்லை; அவர். தமக்கு என ஓர் உரை வரைந்து கொள்ளாது, யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற எண்ணமுடையராய், ஓர் ஊரில் இருந்து வாழாது, ஊர்தோறும் திரிந்து வாழ்வர்; அத்தகையார், வண்டியில் எறி, வழியினைக் கடந்து, இடையில் தளர்ச்சி உண்டாயின், வழிஓர மரத் தடியில் இருந்து இளைப்பாறிச் செல்வர்; அவர் தம் தொழிற்குத் துணைபுரியும் இசைக் கருவிகள் பலப்பல; அவற்றுள் சிறுவங்கியம், பெருவங்கியங்களின் ஒலியோடு,