பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அதியன் விண்ணத்தனார்

ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடத்து
ஊர்இஃது என்னா ஊறுஇல் வாழ்க்கைச்
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டிப்
பாடின் தெண்கிணை கறங்கக் காண்வர
குவியிணர் எருக்கின் ததர்பூங் கண்ணி
ஆடூஉச் சென்னி ததைப்ப மகடூஉ
முளரித் தீயின் முழங்கழல் விளக்கத்துக்
களரி யாவிரைக் கிளர்பூங் கோதை
வண்ண மார்பின் வனமுலைத் துயல்வரச்
செறிநடைப் பிடியொடு களிறுபுணர்ந் தென்னக்
குறுநெடுந் தூம்பொடு முழவுப்புணர்ந் திசைப்பக்
கார்வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும்
தேரை ஒலியின் மானச்சீர் அமைத்துச்
சில்லரி கறங்கும் சிறுபல் லியத்தொடு
பல்லூர் பெயர்வன ராடி ஒல்லெனத்
தலைப்புணர்த் தசைத்த பல்தொகைக் கலப்பையர்
இரும்பேர் ஒக்கல் கோடியர் இறந்த
புன்தலை மன்றம் காணின் வழிநாள்
அழுங்கல் மூதார்க்கு இன்னா தாகும்;
அதுவே மருவினம் மாலை, அதனால்
காதலர் செய்த காதல்

நீடின்று மறத்தல் கூடுமோ மற்றே.”
(அகம் : ௩௦க)