பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௩௯. ஒதலாந்தையார்

ஆதன், தந்தை என்பனவே, ஆந்தை என ஆம் ஆதலின், இவர் ஆதன் என்பார்க்குத் தந்தையாம் முறையுடையாராவர். ஆதன் என்ற பெயர் பெரும்பாலும் சேரரைக் குறித்து வழங்குவது என்ப ஆதலின், இவர் அச்சேர இனத்தாரோடு ஒரளவு தொடர்புடையராதலும் கூடும். இவர் பெயர்க்கு முன்வரும் ஓதல் என்ற சிறப்பு, இவர்பால் அமைந்து காணப்பட்ட ஒதற்பெருமையால் வந்ததாம். இவர் பாடியனவாக நூற்றுமூன்று பாடல்கள் கிடைத்துள்ளன; குறுந்தொகையில் மூன்று; ஐங்குறுநூற்றில் நாறு. இப்பாடல்கள் அனைத்தும் பாலைப் பொருள்குறித்தே பாடப்பெற்றுள்ளன.

பாலை, பிரிவுப்பொருள் குறித்து வருவது: பிரிவு, ஒதல், பகை, தூது இவைகுறித்தே வரும் எனினும், களவு 'ஒழுக்கம் நிகழும் காலத்தே, தலைவியைத் தமர், தலைமகனுக்கு மணம்செய்து தாரார் எனவுணர்ந்தவழி, அத்தலை மகன், தலைமகளை அவள் தமர் அறியாதவாறு அழைத்துக் கொண்டு தன்னுரர் செல்வதாய கொண்டுதலைக்கழிதலும் ஒருவகையான் பிரிவுப்பொருள் குறித்து வந்ததேயாம். புலவர் ஒதலாந்தையார், கொண்டுதலைக்கழிதல், பொருள் வயிற்பிரிதல் ஆய பாலைப்பொருள்கள் தழுவப் பாடியுள்ளார்.

தமரோடு தன்மனையகத்தே வாழ்ந்திருப்பின், தன் கற்பிற்குக் கேடுண்டாம் வண்ணம், தன்தமர் வேறு ஒருவனுக்குத் தன்னை மண்ம்செய்து தந்துவிடுவரோ என்ற அச்சத்தால், ஒரு தலைவி, தான் விரும்பிய தலைவன் நாட்டிற்கு அவனோடு செல்லலாயினள்; தன் மகள் தக்க பருவம் வந்துற்றாள் என அறிந்து அவளுக்கு மணம் முடித்தலும், அவ்வாறு முடிக்கும் வழி, அவள் மணக்க விரும்புவோன் யாவன் என அறிந்து அவனுக்கே மணம் முடித்துத் தருதலும் தாய்க்கு உரிய கடமையாம்; நின் தாய் அக்கட