பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

௪. அம்மூவனார்

மூவன் என்ற பெயருடையார், பண்டைத் தமிழகத்தே பலர் இருந்தனர். பெருந்தலைச் சாத்தனார் பாராட்டிய மூவன் என்னும் புலவன் ஒருவன்; சேரமான் கணைக்காலிரும்பொறையால் வெல்லப்பட்டு, அவனால் பல் பிடுங்கப்பெற்ற மூவன் ஒருவன்; இவர்களினும் நம் புலவர் சிறந்தவராதலின், அம்மூவனாவர் எனச் சிறப்பளித்து வழங்கப்பட்டுள்ளார் என்ப. சேரநாட்டு மக்கள், அம்மு, திம்மு என்னும் பெயர்களைப் பயில மேற்கொள்வதை இன்றும் காண்கிறோம்; அம்மூவனார் சேர நாட்டு நெய்தல் நிலங்களையே பாடியுள்ளாராதலின், இவர் அந் நாட்டினராதலும் கூடும்; அவ்வாறாயின் அவர் இயற்பெயர் மூவன் என்பதன்று அம்மூவன் என்பதே எனக்கோட்டும் பொருந்தும். இவர் குட்டுவனையும், அவன் நாட்டுத் தொண்டி, மாந்தை முதலாம் மாநகர்களையும், மலாடுநாடாண்ட மலைபமான் திருமுடிக்காரியையும், அவன் தலைங்கர் திருக்கோவலூரையும், அவனுக்குரிய பெண்ணையாற்றையும், பாண்டியர் கொற்கைத் துறையினையும் பாராட்டியுள்ளார்.

குட்டுவன், யானைப் படையாலும், தேர்ப்படையாலும் சிறப்புடையனாவன்; அவன் தன் பகைவேந்தரைக் கொன்று வென்ற போர்க்களத்தே எழும் முரசொலி, கடல் ஒலி போலும் பேரொலி தரும் “கடும் பகட்டு யானை, நெடுந்தேர்க் குட்டுவன், வேந்தடு களத்தின் முரசதிர்ந் தன்ன ஓங்கற் புணரி” (நற் : ௩௯கு), எனக் குட்டுவனையும், தொண்டித்துறை குட்டுவனுக்கு உரியது ; “குட்டுவன் தொண்டி” (ஐங்: கஎஅ.); தொண்டி நகர்த் தெருக்களில் திரையின் ஒலியொடு கலந்து முழவின் ஒலி எழுந்து முழங்கும். “திரை இமிழ் இன்னிசை அளைஇ, அயலது முழவிமிழ், இன்னிசை மறுகுதொ றிசைக்கும் தொண்டி.” (ஐங்: - கஎக). தொண்டி மீன் வளம் நிறைந்தது; அத்துறைவாழ் பரதவர் பழமையுற்ற படகுகளைப் புதுக்குவதிலும், புதிய வலைகளைப் பின்னுவதிலும். கருத்துடையவர்; தாம்