பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கந்தக்கண்ணன்

159

அஞ்சுகின்றேன்; அவர் அவ்வாறு மயங்காது, வினை முடித்து மீளும் மாண்பினராகுக!” என்று கூறினாள்; தலைவன் கூறும் சொல்லிடத்தே அவள் வைத்துள நம்பிக்கையினையும், தலைவன், வினைமுடியாது மீளின் அவள் கொள்ளும் உள்ளத்துயரினையும், புலவர் நன்கு உணர்ந்து அந்நற்பண்பு நாட்டுமக்கள்பால் நன்கு அமைதல்வேண்டும் என்ற நல்லெண்ணம்கொண்டு, அத்தலைவியின் கூற்றை ஒர் அழகிய பாட்டாக ஆக்கி அளித்துள்ளார். -

'பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து
அரும்பே முன்னும் மிகச்சிவங் தனவே;
யானே மருள்வேன்? தோழி! பானாள் .
இன்னும் தமியர் கேட்பின், பெயர்த்தும்
என்ன குவர்கொல் பிரித்திசி னோரே?
அருவி மாமலேத் தத்தக்

கருவி மாமழைச் சிலைதருங் குரலே."
(குறுங் : கச)

காலந்துவருது கடனாற்றும் இயல்பினவாய மரம், செடி, கொடிகள் தம் கடனாற்றி, அக்காலம் வந்துற்றது என அறிவிப்பினும், அதை ஏற்றுக் கொள்ளாள் தலைவி எனக் கூறும் இப்பாட்டோடு ஒத்த கருத்தமைந்த பாட்டு ஒன்றை இளந்திரையனரும் பாடியுள்ளார்.

'மதியின்று
மறந்துகடல் முகந்த கமஞ்சூல் மாமழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
கார்என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வில
பிடவும் கொன்றையும் கோடலும்

மடவ வாகலின் மலர்ந்தன பலவே.”
(நற் : ௬௬).