பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௬. அழிசி நச்சாத்தனார்

இவர் இயற்பெயர் சாத்தனார்; இவர் புலமைநலம் கண்ட அக்கால மக்கள், சிறப்புக் குறித்து வழங்கப்பெறும் “ந” என்ற அடைதந்து இவரை வழங்கினர்; இவர் பெயர்க்கு முன்வந்துள்ள அழிசி என்ற சொல், புலவரின் தந்தையார் பெயர்போலும்; அழிசி என்ற பெயருடைய சிற்றரசன் ஒருவனும் அக் காலத்தே வாழ்ந்திருந்தான்; அவன் ஆர்க்காடு எனும் ஊரை உடையவன்; சேந்தன் என்பானின் தந்தையாம் உறவுடையவன்.

“திதலே எஃகின் சேந்தன் தந்தை
தேங்கமழ் விரிதார் இயல்தேர் அழிசி
வண்டுமூசு நெய்தல் நெல்லிடை மலரும்
அரியலங் கழனி ஆர்க்காடு,” (நற்: க௯o)

“காவிரிப்
பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த
ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை
அரியலம் புகவின் அந்தோட்டு வேட்டை
நிரைய ஒள்வாள் இளையர் பெருமகன்

அழிசி ஆர்க்காடு.” -(குறுந்: உருஅ)

பேயோடு பழகினும் பிரிவரிது என்ப எனின், தலையாய குணங்களால் நிறைந்தாளொருத்தி, தன் கணவன் பரத்தையரொழுக்கம் மேற்கொண்டான் எனக் கண்டு, அவனைக் கைவிடல் கூடுமோ? பெரியோர், முன்னெருகால், நன்மையொன்று செய்தவர், பின்னர்த் தம்மைக் கொல்வதுபோலும் கொடுமைகளைப் புரியினும், அவர் முன்செய்த அவ்வொரு நன்றியை நினைந்தே அவர் கொடுமைகளை மறப்பர்; பெரியோர்தம் பண்பு இது; தலைவி பெருமை தரும் குணங்களால் நிறைந்தவள்; அவள் தன் கணவன் தகாவொழுக்கம் மேற்கொண்டு தனக்குப் பெருந்துயர்