பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர் நல்லந்துவனார்

35

விடங்களை அடைக்க ஊரில் பறையறையப் பெறுவதையும் புலவர் விளக்கியுள்ளார்:

“வரைச்சிறை உடைத்ததை வையை, வையைத்
திரைச்சிறை, உடைத்தன்று கரைச்சிறை; அறைகெனும்
உரைச்சிறைப் பறைஎழ ஊர் ஒலித் தன்று”
(பரிபாடல், சு: உ உ -ச)

வையை, மலையின் இழிந்தும், காட்டினுட் புகுந்தும், கரைகளை அழித்தும் பெருகி வருவதால், அந்நீர் முற்றும் , ஆங்காங்குள்ள மணம்நிறை மலர்களால் மறைப்புண்டு இது புனலாறு அன்று, பூம்புனலாறு எனப் போற்ற விளங்கும். வையையின் இக்காட்சியைத் திருமருதத்துறைக்கண் நின்று கண்டு களித்த புலவர் ஆசிரியர் நல்லந்துவனார், “மலையில் மலர்ந்த புன்னை, கரையிற் கிடந்த சுரபுன்னை வண்டொளிக்கும் சண்பகம், இல்லம், தேற்றா, வில்வம், வேங்கை, காந்தள், தோன்றி, கண்நிகர் நீலம் ஆய மலர்களே அருவிகள் அடித்துக்கொணர்ந்து குவிப்பதால், அவை குவிந்து காணப்படும் இத்திருமருதத்துறையினைப் பூப்பறிப் பார் தாம் பறித்த பன்னிற மலர்களைக் குவித்துவைக்கும் மலர்மண்டபம் என்று கூறி மகிழ்வேனே ? மலர்ப் போர்வையும், அணிதிகழ் ஆரமும், திரையும், நுரையும், சிறுமென்குமிழுங் கொண்டு, மணங்கமழ் சக்தனம் மார்பிற் பூசித்தோன்றும் வையை என்ற பெயருடையாளொரு பெண்ணின் ஆடையாம் எனக் கூறி அகமகிழ்வனே? பார் மகள், கள் பருகும் மிடறு எனக் கூறிப் பாராட்டுவேனோ” என்றெல்லாம் பாடிப் பாராட்டியுள்ளார். (பரி. கக்: கசு - ஙு.0)

வையை வெள்ளம் வந்தது எனக்கேட்ட மதுரை வாழ்மக்கள், அவ்வெள்ளத்தைக் காணவும், அதில் ஆடிமகிழவும் விரும்பிய தங்கள் உள்ளத்தின் விரைவால், செய்வின் அறியாராய்த் தேரிற் பூட்டவேண்டிய குதிரைகளே வண்டியிற் பூட்டுவர்; வண்டியிற் பூட்டவேண்டிய எருதுகளைத் தேரிற் பூட்டுவர்; குதிரைச் சேனங்களே யானைக்கு